ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் முன் நீங்கள் இதில் முதலீடு செய்யலாமே!

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது நிதிய கொள்கையை மார்ச் 19ம் தேதியன்று மறுபரிசீலனை செய்ய இருக்கின்றது. அப்போது அது தனது வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது வங்கிகள் தனது வைப்பு தொகை விகிதங்களை குறைக்க வழிவகுக்கும். அவசியமில்லையென்றாலும், வட்டி விகிதங்கள் வீழ்ச்சி அடைவதற்க்கு முன்பதாக நான்கு வைப்பு தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும்.

கேடிடிஎப்சி:

கேரளா போக்குவரத்து மேம்பாட்டு நிதிக்கழகம் கேரளா அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு ஸ்தாபனம். ஆகையால் தங்களின் வைப்பு தொகை பாதுகாப்பதானதாக இருக்கும். இரண்டாவதாக ஒரு மூன்றாண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதம். இது மற்ற வங்கிகள் வழங்கி வரும் வட்டி விகிதத்தை விட அதிகம். எனவே பாதுகாப்பு மற்றும் வருமானம் கிடைக்கும் என்பதால் இதில் செய்யப்படும் வைப்பு தொகை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஹட்கோ:

வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சி கழகம் 9.7 சதவீதம் வட்டியை வழங்குகிறது. இதுவும் அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் போதுமானதை விட அதிக பாதுகாப்பு உள்ளது. மேலும் இதன் வட்டி விகிதம் மற்ற வங்கிகள் வழங்குவதை காட்டிலும் அதிகம்.

கத்தோலிக்க சிரியன் வங்கி:

ஒன்று முதல் இரண்டு வருட வைப்பு தொகைக்கு கத்தோலிக்க சிரியன் வங்கி வழங்கும் வட்டி 9.65 சதவீதம். உற்று நோக்கினால் வட்டி விகிதமானது குறுகிய மற்றும் நடுத்தர இடைவெளியில் குறைய கூடிய சாத்தியக்கூறு இருப்பதினால் 2 வருடங்கள் வைப்பு தொகைக்கு இது ஒரு நல்ல வட்டி விகிதமாகும்.

மஹிந்திரா நிதி:

மஹிந்திரா நிதி தனது மூன்று வருட நிரந்தர வைப்பு நிதிக்கு 10 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிரந்தர வைப்பு நிதியானது கிரைசில் மதிப்பீட்டின் படி உயர்ந்தபட்ச பாதுகாப்பான ‘எப்ஏஏஏ' வை பெற்றுள்ளது. எந்த ஒரு கட்டத்திலும் இந்நிறுவனம் ஒரு பாரம்பரியத்தை பெற்றுள்ளது. மேலும், மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் பாதுகாப்பும் மிக மிக அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 deposits to consider before RBI cuts rates on March 19 | ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் முன் நீங்கள் இதில் முதலீடு செய்யலாமே!

The Reserve Bank of India (RBI) is set to review its monetary policy on March 19, wherein, it's widely expected to cut repo rates (interest rates).
Story first published: Monday, March 18, 2013, 10:17 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns