கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன்

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

-சதுக்கபூதம்

கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் அவை வெவ்வேறு விதமாக பிற நாடுகளால் காப்பாற்றப்பட்டு (''பெயில் அவுட்'') வருவதையும் பார்த்து வருகிறோம்.

பொதுவாக 'பெயில் அவுட்' செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறைகளை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்தப்படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும்.

தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு 'பெயில் அவுட்' வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

மற்ற நாடுகளில் நடந்தது போல் அல்லாமல் சைப்ரஸ் 'பெயில் அவுட்' வாங்க வித்தியாசமான விதிமுறையை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.

 

வங்கியில் பணம் சேமிப்போர்க்கு ஆப்பு!:

ஐரோப்பிய யூனியனின் கடனை வாங்க சைப்ரஸ் நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் தங்களது வங்கியில் பணத்தை போட்டிருப்பவர்களிடமிருந்து சுமார் 10% பணத்தை வரியாக எடுத்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு யூரோ முதல் 1 லட்சம் யூரோ வரை வங்கியில் டெப்பாசிட் வைத்திருப்பவர்களிடமிருந்து 6.75 சதவீதம் பணமும் அதற்கு மேல் இருக்கும் பணத்தில் 9.9 சதவீதமும் வரியாக வங்கிகள் தனது வாடிக்கையாளரிடமிருந்து எடுத்து கொள்ளும்.

இந்த வரி விதிப்புக்கு பென்சன் பணத்தை வங்கியில் இட்டு செலவு செய்து உயிர் வாழும் முதியவரோ, கணவர் இறந்த இன்சூரன்சு பணத்தை வங்கியில் போட்டு அதில் வாழ்க்கை நடத்தி வரும் விதவையோ, தங்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு பணம் சேர்ப்பவரோ விதி விலக்கு கிடையாது!.

இதற்குப் பதிலாக அதற்கு ஈடான வங்கியின் பங்கு டெபாசிதாரர்களுக்கு அளிக்கப்படும். இந்த அளவு மோசமான 'பெயில் அவுட்' நிபந்தனையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா?.

அதற்கு அந்த நாட்டின் அதிபரின் பதில் என்ன தெரியுமா?.. ஐரோப்பிய யூனியனின் மற்ற நிபந்தனைகளை ஒப்பிடும் போது இதுதான் ரொம்பவே decent ஆக இருந்ததாம்!.

இந்த புதிய வரி பற்றிய மசோதா சைப்ரஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யபட்டு ஏற்று கொள்ளபடவில்லை. ஆனாலும் சைப்ரஸ் இந்த தீர்மாத்தை ஏற்று கொள்ளாத வரை அந்நாட்டு வங்கிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்கிறது ஐரோப்பிய யூனியனின் முக்கிய நாடான ஜெர்மனி.

வியாழகிழமை வரை வங்கிகள் மற்றும் பங்கு சந்தை சைப்ரசில் மூடபட உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன் முடிவு தெரியும் வரை அந்நாட்டு மக்கள் யாரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது!

சைப்ரசுக்கு பிடித்த கிரகம்:

இந்த நிலைக்கு சைப்ரஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

2008ம் ஆண்டு சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பின்படி சைப்ரஸ் நாடு நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி அடையும் நாடாகவும், குறைந்த அளவிலான வேலை வாய்ப்பின்மை கொண்ட மற்றும் சிறந்த முறையில் அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நாடாகவே கருதப்பட்டது.

அனால் சைப்ரசிலும் பெரும்பான்மையான மேலை நாட்டில் உள்ளது போலவே கட்டுபாடற்ற வங்கிகள் உள்ளன. அந்த நாட்டு வங்கிகள் கொடுத்துள்ள கடனின் ஒப்பீட்டு அளவனாது, அந்த நாட்டின் GDPயை விட சுமார் 9 மடங்கு அதிகம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி சைப்ரஸ் நாட்டின் வாங்கிகள் பெருமளவு பணத்தை கிரீஸ் நாட்டின் கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தன. கிரீஸ் நாட்டை 'பெயில் அவுட்' செய்ய ஐரோப்பிய யூனியன் அந்நாட்டின் கடனை சென்ற ஆண்டு பெருமளவு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் சைப்ரஸ் நாட்டின் வங்கிகளின் நிலை மோசமானது.

அதே போல் கட்டுபாடற்ற வீட்டு கடனையும் அள்ளி வீசியதன் விளைவு பிரச்சனையை இன்னும் மோசமாக்கி இருந்தது.

ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் பலர் சைப்ரஸ் நாட்டின் வங்கி மூலம் கிரீஸ் நாட்டு கடன் பத்திரத்தில் அதிகம் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

 

வங்கிகளின் கடனின் அளவு அந்த நாட்டின் மொத்த உற்பத்தியை (GDP) விட பல மடங்கு இருப்பதால் அந்த நாட்டின் அரசால் அந்நாட்டு வங்கியை காப்பாற்ற வாய்ப்பில்லை. ஒரு நாட்டின் வங்கிகளின் வீழ்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வீழ்ச்சியாகும்.

சைப்ரஸ் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் பொது கரன்சியையும் தேவையான அளவு பிரிண்ட் செய்யவும் முடியாது. எனவே சைப்ரஸ் அரசு தனது நாட்டின் வங்கியை காப்பற்ற ஐரோப்பிய யூனியனை நோக்கி கையேந்தியது.

அதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த விதி முறைதான் நீங்கள் மேலே படித்தது. ஆக மொத்தம் வங்கிகள் அடித்த கொள்ளையால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான்.

இன்றைய உலக பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது வங்கிகள். வங்கிகள் என்ற அமைப்பின் அடிப்படையே "நம்பிக்கை" அடிப்படையில் செயல்படுவது தான். தற்போது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள இந்த தண்டனையால் மக்களுக்கு வங்கிகள் மீது ஏற்படும் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.

ஏனெனில் இன்று சைப்ரசில் நடைபெறும் நிகழ்வு நாளை எந்த நாட்டிளும் நிகழலாம் அல்லவா?. இது உலக மற்றும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

இது போல் 'பெயில் அவுட்'டுக்கு நூதன நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருவாதால் அனைவரின் மனதிலும் நிற்கும் செய்தி

அவர்களது Hit Listல் இருக்கும் அடுத்த நாடு எது? என்பது தான்.

இந்தியாவில் ஓரளவு கட்டுபாடோடு இருக்கும் வங்கி துறையின் கட்டுபாடுகளை தளர்த்துவதே தனது குறி என்று திரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை..

ஆனால், எவ்வளவு காலம் தான் தெரியாதது மாதிரியே நடிப்பார்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cyprus tax bank
English summary

Rejection of Deposit Tax Scuttles Deal on Bailout for Cyprus | கையேந்தும் சைப்ரஸ்.. 'கந்து வட்டிகாரனாகும்' ஐரோப்பிய யூனியன்

Lawmakers rejected a 10 billion euro bailout package on Tuesday, sending the president back to the drawing board to devise a new plan that might still enable the country to receive a financial lifeline while avoiding a default that could reignite the euro crisis. The bailout package, which would have set an extraordinary precedent by taxing ordinary bank depositors to pay part of the bill, led to street protests in this tiny Mediterranean country and set off a wave of anxiety across Europe.
Story first published: Thursday, March 21, 2013, 6:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?