எந்தெந்த இணையதளங்களில் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை கண்டிப்பாக ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். ஏராளமானோர் தங்கள் வரிமான வரி கணக்கை அரசின் வருமான வரி இணையதளத்தில் தாக்கல் செய்வதால் அது நிரம்பி வழிந்துவிடும்.

 

எனவே அரசின் வருமான வரி இணையதளத்தைத் தவிர்த்து, கீழ்காணும் ஒரு சில நம்பிக்கையான இணையதளங்களிலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

கிளியர் டாக்ஸ்

கிளியர் டாக்ஸ்

இ-பைலிங்கிற்காக இந்த இணையதளம், இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். எனவே வருமான வரி கணக்கை இந்த இணையதளத்தில் மிக எளிதாக தாக்கல் செய்யலாம்.

இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க மிக எளிதான 5 படிநிலைகள் உள்ளன. மேலும் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.249 செலுத்தி இதில் விண்ணப்பிக்கலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் பல்வேறு பணிகளில் இருப்போர் ரூ.749 செலுத்தி இதில் விண்ணப்பிக்கலாம். இந்த இணைய தளத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் பெண்கள் தங்கள் வருமான வரி கணக்கை இந்த இணையதளம் மூலம் இலவசமாக தாக்கல் செய்யலாம்.

விண்ணப்பித்த பின் அவர்கள் ஒரு டிஜிட்டல் சான்றிதழை வழங்குவார்கள். அதற்கு ரூ.499 செலுத்த வேண்டும். இந்த சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

டாக்ஸ்மைல்

டாக்ஸ்மைல்

டாக்ஸ்மைல் இணையதளம், தனிப்பட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் ஆகியோர் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த இணையதளத்தில் டாக்ஸ்மைல் சில்வர், டாக்ஸ்மைல் கோல்டு மற்றும் டாக்ஸ்மைல் பிரீமியம் என்று பல திட்டங்கள் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக என்ஆர்ஐ பிரீமியம் என்ற ஒரு சிறப்புத் திட்டமும் உள்ளது.

டாக்ஸ்மைல் சில்வர் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.250, டாக்ஸ்மைல் கோல்டு திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.400 மற்றும் டாக்ஸ்மைல் பிரீமியம் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.2,000 கட்டணமாக செலுத்த வேண்டும். என்ஆர்ஐ பிரீமியத்தில் விண்ணப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.3,100 செலுத்த வேண்டும்.

டாக் ஷா
 

டாக் ஷா

இந்த இணையதளமும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மிக எளிமையான 3 வழிமுறைகள் மூலம் இந்த இணையதளத்தில் இ-பைலிங் செய்ய முடியும். இந்த இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்களிடம் ரூ.181 முதல் ரூ.2,580 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டாக்ஸ் ஸ்பேனர்

டாக்ஸ் ஸ்பேனர்

இ-பைலிங் செய்வதற்கு இந்த இணையதளமும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். மிகச் சிறந்த ஆன்லைன் டாக்ஸ் பிரிபரர் என்று இந்த இணையதளத்திற்கு மணி டுடே 2009ம் ஆண்டிலும், மிண்ட் 2010ம் ஆண்டிலும் சான்றிதழ் வழங்கி இருக்கின்றன.

இந்த இணையதளத்தில் இருக்கும் இன்டர்பேஸ் மிக எளிதாக இருக்கும். மேலும் இது ஐடிஆர்-4க்கான இ-பைலிங் வசதியையும் வழங்குகிறது.

மை ஐடி ரிட்டர்ன்

மை ஐடி ரிட்டர்ன்

இந்த இணையதளம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய இன்கம் டாக்ஸ் இ-ரிட்டர்ன் இன்டர்மீடியரி (இஆர்ஐ) இணைய தளமாகும். இந்த இணையதளம் 24 மணி நேர சேவையை வழங்குகிறது. எனவே இந்த இணையதளத்தில் எந்த நேரத்திலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

இன்கம் டாக்ஸ் இந்தியா

இன்கம் டாக்ஸ் இந்தியா

இந்திய வருமான வரித் துறை நடத்தும் இந்த இணையதளம் வரி சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. இந்த இணையதளம் மார்ச் மாதம் முழுவதும் 24*7 மணி நேர ஹெல்ப் லைன் சேவையை வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax: Websites where you can file your tax returns online | எந்தெந்த இணையதளங்களில் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

The time to file your tax returns is drawing near and individuals who earn more than Rs 10 lakh have to mandatorily file their returns online. The Government's Income Tax website may be overwhelmed due to the sheer numbers filing returns. Hence, one can chose from other myriad tax filing sites. The IT department has also set up call centers, for people who need assistance. Above is a list of few authorised websites
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X