பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்கும் 2 நிதி நிறுவனங்கள்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்கும் 2 நிதி நிறுவனங்கள்
சென்னை: ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல். ஆகிய நிதி நிறுவனங்கள் மற்ற வங்கிகளை விட நீண்ட கால மற்றும் குறைந்த கால வைப்புத் தொகைக்கு(பிக்சட் டெபாசிட்) அதிக வட்டி வழங்குகின்றன. (7 banks that offer highest interest rate on tax saving FDs)

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்

ஒரு ஆண்டு கால வைப்புத் தொகைக்கு ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 12 சதவீத வட்டியை வழங்குகிறது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் வட்டியை கணக்கிட்டு வழங்குகிறது. ஜெய்பிரகாஷ் வழங்கும் இந்த 12 சதவீத வட்டி விகிதம் வங்கிகளில் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். ஏனெனில் வங்கிகள் வைப்புத் தொகைக்கு அதிகமாக 9.25 சதவீத வட்டியை வழங்குகின்றன.

ஜெய்பிரகாஷ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதத்தை கணக்கிட்டு வழங்குவதால் வருட முடிவில் நம்முடைய ஒரு வருட வைப்புத் தொகையின் வட்டி விகிதம் 12.12 சதவீதமாக அதிகரிக்கிறது. சிமெண்ட் தயாரித்தல், பெரிய பெரிய கட்டிங்களைக் கட்டுதல் மற்றும் காற்றாலை போன்ற துறைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் தனியார் நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கு மேல் பணத்தை வைப்புத் தொகையில் போடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தனியார் நிதி நிறுவனங்களில் போடப்பட்டும் வைப்புத் தொகைக்கு 100 சதவீத பாதுகாப்பு உத்திரவாதத்தை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தனியார் நிதி நிறுவனங்கள் நீண்ட காலம் இயங்குமா என்பது கேள்விக்குறியே. தனியார் நிதி நிறுவனங்கள் திடீரென்று திவாலாக வாய்ப்புகள் உண்டு.

டி.ஹெச்.எஃப்.எல். ஆஷ்ரே டெபாசிட்

டி.ஹெச்.எஃப்.எல். என்ற நிதி நிறுவனத்தின் வைப்புத் தொகைக்கு கேர் அமைப்பு ஏஏ ரேட்டிங் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் போடப்பட்டும் வைப்புத் தொகைகளுக்கு முழுமையான பாதுகாப்பு உண்டு என்று தெரிகிறது. இந்த நிறுவனம் ஓராண்டுக்கான வைப்புத் தொகைக்கு 10.50 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வைப்புத் தொகைக்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத் தொகைகளுக்கும் 10.50 சதவீத வட்டி வழங்குகிறது.

இந்த நிறுவனம் வழங்கும் வட்டி விகிதம் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 company fixed deposits to consider for superior returns | பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி கொடுக்கும் 2 நிதி நிறுவனங்கள்

The company fixed deposits of Jaiprakash Associates and DHFL are offering superior interest rates as compared to banks and could be considered for short term investment, though they have an element of risk, like all other company deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X