குறைந்த விலையில் குஜாலாக பறக்க... ஏர் ஆசியா வழங்கும் சலுகை விலை டிக்கெட்ஸ்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

குறைந்த விலையில் குஜாலாக பறக்க... ஏர் ஆசியா வழங்கும் சலுகை விலை டிக்கெட்ஸ்
டெல்லி: மிகக்குறைந்த விலையான ரூபாய் 3300ல் தென்கிழக்கு ஆசியாவில் பயணம் செய்யும் சலுகையை ஏர் ஆசியா தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கென அது 2இலட்சம் இருக்கைகளை ஒதுக்கியுள்ளது.

வாடிக்கையாளர் ரூபாய் 3300ல் கல்கத்தாவில் இருந்து பேங்காங்கிற்கு பறக்கலாம். அதுபோல, சென்னையில் இருந்து பேங்காக்கிற்கு ரூ 3500, பெங்களூரில் இருந்து கோலாலம்பூருக்கு ரூ 5500, கொல்கத்தாவில் இருந்து கோலாலம்பூருக்கு ரூ 5000, சென்னை அல்லது கொச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு ரூ4500 மற்றும் திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு ரூ4000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நாங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த ‘எல்லோரும் பறக்கலாம்' என்ற வாக்குறுதியை சரியாக காப்பாற்றுகிறோம்' என ஏர் ஆசியாவின் தலைமை வர்த்தக அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் இச்சலுகை வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.

மார்ச் மாதத்தில் இதே போன்றதொரு சலுகையை டைகர் ஏர்வேஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால், டைகர் ஏர்வேஸ்ன் சலுகைகளில் இருந்து தங்களது சலுகைகள் மாறுபட்டவை என ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

ஏர் ஆசியாவின் ஒவ்வொரு விமானத்திலும் சலுகை பயனாளிகளுக்கென, தலா 10 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: good returns
English summary

AirAsia offers two million cheap tickets to South East Asian cities | குறைந்த விலையில் குஜாலாக பறக்க... ஏர் ஆசியா வழங்கும் சலுகை விலை டிக்கெட்ஸ்

In the backdrop of its India entry, Malaysian budget carrier AirAsia has opened bookings for two million seats between April 2 and 7, 2013 offering air tickets as cheap as Rs 3,300 to South East Asian destinations for travel next year.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns