விமான டிக்கெட்டை கேன்சல் செய்வது இனி ரொம்பவே காஸ்ட்லி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

விமான டிக்கெட்டை கேன்சல் செய்வது இனி ரொம்பவே காஸ்ட்லி
மும்பை: இனி விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பெரும் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

A few documents to check before buying a property

விமான டிக்கெட்டுகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அதிகத் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளூர் சேவைக்கான அனைத்து விமானங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் கட்டணத்தை ரூ.1,050க உயர்த்தியுள்ளது. ரத்து செய்யும் அபராதம் ரூ.200 முதல் ரூ.2,000 வரை இருக்கும்.

விலை குறைவான எகனாமி வகுப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அந்த பணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது. மிகவும் குறைந்த கட்டணத்திற்கு சற்று அதிகமான விமான டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.2,000 வசூலிக்கப்படும். உயர்தர எகனாமி வகுப்புக்கு ரூ.1,000ம், பிரீமியம் வகுப்பு டிக்கெட் ரத்துக்கு ரூ.250 முதல் ரூ.500 வரையும் வசூலிக்கப்படும்.

விலை குறைவான டிக்கெட்டை ரத்து செய்ய அதிக பணமும், விலை அதிகமுள்ள டிக்கெட்டை ரத்து செய்ய குறைந்த தொகையும் வசூலிக்கப்படும்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பார்த்து பிற விமான நிறுவனங்களும் டிக்கெட் ரத்து கட்டணத்தை உயர்த்தலாம் என்று சுற்றுலா ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் டிக்கெட்டுக்கு பல சலுகைகளை அளித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஸ்பைஸ் ஜெட் டிக்கெட் விலை குறைத்தது. அதைப் பார்த்து பிற நிறுவனங்களும் டிக்கெட் விலையை குறைத்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cancelling air tickets now a costly affair | விமான டிக்கெட்டை கேன்சல் செய்வது இனி ரொம்பவே காஸ்ட்லி

After reducing the fares, airlines are now increasing the cancellation charges. Jet Airways is the first one to revise the cancellation charges on tuesday. Others might follow its lead.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns