டெல்லி : ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. மேலும் சிமெண்ட் வர்த்தகம் இந்தியாவில் தான் அதிகம் என்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் சிமென்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தன்னுடைய துணை நிறுவனங்கள் மூலம் ஏசிசி, அம்புஜா சிமென்ட் விற்பனையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் வருடாந்திர அறிக்கையில், ‘ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில்தான் அதிகம் காணப்படுகிறது.
இங்கு உள்கட்டமைப்பு திட்டங்கள், மலிவு விலையிலான குடியிருப்புகளை கட்டும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது. எனவே, சிமெண்ட் வர்த்தகத்தில் ஆசியாவிலேயே அதிகப்படியான வர்த்தகத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன' என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications