இந்தியா–ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள்: ரூ.50 கோடி செலவில் உயர்கல்வியில் கூட்டு ஆராய்ச்சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா–ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள்: ரூ.50 கோடி செலவில் உயர்கல்வியில் கூட்டு ஆராய்ச்சி
பெர்லின்: இந்தியா-ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரூ.50 கோடியே 40 லட்சம் செலவில் உயர் கல்வியில் கூட்டு ஆராய்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

பிரதமர் மன்மோகன்சிங் ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ, அறிவியல்-தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஜெர்மனி தரப்பில் அந்த நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜெர்மனி முக்கிய கூட்டாளி:

இதில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, ‘‘உள்கட்டுமான வசதி, உற்பத்தி, அறிவியல் தொழில் நுட்பம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஜெர்மனியை முக்கிய கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். இந்த துறைகளில் எண்ணற்ற ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொள்ள விரும்புகிறோம். ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார கூட்டாளி ஜெர்மனி. உலகளவில் ஜெர்மனி வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பத்துறையில் முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது'' என கூறினார்.

6 முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே நேற்று 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின. அவை வருமாறு:

உயர் கல்வியில் கூட்டு:

இரு நாடுகளும் தலா 3½ மில்லியன் (சுமார் ரூ. 25 கோடியே 20 லட்சம்) செலவில் உயர் கல்வித்துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களில் ஈடுபட ஒப்பந்தம்

அன்னிய மொழியாக வளரும்:

ஜெர்மனி மொழியை அன்னிய மொழியாக வளர்க்க ஒப்பந்தம். இதன்படி தற்போது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயங்களில் 30 ஆயிரம் குழந்தைகள் ஜெர்மனி கற்றுவருவதை, மேலும் அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.

பசுமை மின்சக்தி போக்குவரத்து:

பசுமை மின்சக்தி போக்குவரத்து கட்டமைப்பு நிறுவ ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்கீழ் பசுமை மின்சக்தி போக்குவரத்து கட்டமைப்பை நிறுவ ஒரு பில்லியன் யூரோ மென்கடன் (ஜெர்மனியிடமிருந்து) பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்தொகுப்புகள் (கிரீடு) மரபுசாரா எரிசக்தியை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும்.

ஒப்பந்தம் பாதுகாப்பு:

இந்திய-ஜெர்மன் சிவில் பாதுகாப்பு ஆராய்ச்சி ஒப்பந்தமும் கையெழுத்தானது.

விவசாயம்:

விவசாயத்துறையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தர அளவுப்பாடு:

உள்கட்டமைப்பு, தர அளவுப்பாடு ஒத்துழைப்பு, உற்பத்தி பொருள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒரு ஒப்பந்தம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: இந்தியா
English summary

6 MoU's sign between India and Germany | இந்தியா–ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள்: ரூ.50 கோடி செலவில் உயர்கல்வியில் கூட்டு ஆராய்ச்சி

The Indian Prime Minister on tour to Germany. 6MoU's worth rs 50 crore had been signed between two nations
Story first published: Friday, April 12, 2013, 10:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X