வருமான வரி ஏய்ப்பு செய்தால் பத்திரிக்கைளில் பெயர் வரும்!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி ஏய்ப்பு செய்தால் பத்திரிக்கைளில் பெயர் வரும்!
டெல்லி: வருமான வரி ஏய்ப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பகிரங்கமாக பத்திரிகைகளில் வெளியிட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

 

(Should you buy gold after the 20% fall?)

நாட்டில் வரியே கட்டாமல் ஜாலியாக இருப்போரே அதிகம். அதே நேரத்தில் வரி கட்டுவதில் முறைகேடு செய்வது, வருமானத்தைக் குறைத்துக் காட்டுவது உள்ளிட்ட தவறுகளையும் பலர் செய்து வருகின்றனர்.

மாதந்தோறும் படாதபாடு படும் மாத சம்பளக்காரர்கள் மட்டுமே மிகச் சரியான வருமான வரியைக் கட்டுகின்றனர்.

பில் இல்லாமல் விற்பனை செய்வோர், தொழிலதிபர்கள், டாக்ஸி-ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள், ஹோட்டல் அதிபர்கள் என ஒரு பிரிவினரில் பெரும்பாலானோர் வரியே கட்டுவதில்லை, அப்படியே கட்டினாலும் வருமானத்தை முழுதாகக் காட்டுவதில்லை.

சிலர் வருமான வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகவே தங்கள் இருப்பிடத்தில் தங்கியிருக்காமல் சிறிது காலத்துக்கு தலைமறைவு வாழ்க்கை கூட வாழ்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களை பகிரங்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களது விவரங்கள் முதலில் வருமான வரித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

பின்னர் அவர்களது பெயர்கள் நாளிதழ்களிலும் வெளியிடப்படுமாம்.

2012-13ம் நிதியாண்டில் வருமான வரியாக ரூ.41,115 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.13,432 கோடிதான் வரி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax evasions: IT dept to publish names in news papers | வருமான வரி ஏய்ப்பு செய்தால் பத்திரிக்கைளில் பெயர் வரும்!

Income Tax department is planning to publish names of tax evaders names in news papers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X