இந்திய சந்தையில் பெருகி வரும் சீன பங்களிப்பால் பாதிப்பில்லை: அசோசெம்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

இந்திய சந்தையில் பெருகி வரும் சீன பங்களிப்பால் பாதிப்பில்லை: அசோசெம்
சென்னை: இந்திய சந்தைகளில் சீனாவின் பங்கு வேகமாக அதிகரித்து வருவதாகவும் மற்றும் தற்போது அமெரிக்க டாலரில் 40 பில்லியனாக இருக்கும் (சுமார் ரூ. 2,22,000 கோடி) வருடாந்திர உபரி சந்தை மதிப்பு, இந்த ஆண்டின் முடிவில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வாணிபத் தொடர்புகளை ஆய்வு செய்த இந்திய வாணிப கூட்டமைப்பு அல்லது அசோசெம் (ASSOCHAM) கூறியுள்ளது.

இதனால் இந்தியா சீனவாவுடனான தன்னுடைய உறவுமுறைகளை கடினப்படுத்துவதற்கு பரிந்துரைப்பதற்கு பதிலாக, 'இந்த இரு அண்டை நாடுகளின் சிறப்பான நலனை இந்த உறவுகள் மேம்படுத்தும் மற்றும் இது வாணிபத் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலமாகவே உறுதிப்படுத்தப்படும்' என்றும் இந்திய வாணிப கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த மாதத்தில் சீன பிரதமரின் வருகையின் போது இந்த இரு நாடுகளும் தங்களுடைய எல்லைப் பிரச்சனைகள் உட்பட ராணுவ முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுப்பார்கள் என்று இந்திய வாணிப கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

சீனாவிலிருந்து மட்டும் சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான இறக்குமதிகளை கொண்டிருக்கும் இந்தியா, பதிலாக 2012-2013 ஆண்டில் ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் சுமார் 12.41 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதியை செய்துள்ளதாக சமீபத்தில் கிடைக்கப்பட்ட வகைப்படுத்தப்படாத புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2012-13 நிதியாண்டில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு 57 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் ஏற்றுமதியின் அளவு சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2012-13-ல் இருக்கும் இந்த வகையான வாணிபத் தொடர்புகள் இதற்கு முந்தைய நிதி ஆண்டுகளிலும் ஓரளவு பின்பற்றப்பட்டு வந்தாலும், உபரியாக சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருப்பது இந்தியர்களுக்கு தொடர்ச்சியான கவலை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

இந்த நிதியாண்டில், (11 மாதங்களுக்கான வகைப்படுத்தப்படாத புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன), மொத்த இறக்குமதி அளவான 141 பில்லியன் அமெரிக்க டாலர்களில், முக்கியமான ஐந்து பொருட்களின் இறக்குமதியில் சீனாவின் பங்கு மட்டும் 22.80 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியைப் பார்க்கும் போது சீனாவிற்கு அனுப்பபப்பட்ட பொருட்களில் பெட்ரோலிய பொருட்கள், போக்குவரத்து தளவாடங்கள், எந்திரங்கள், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் ஆகியவை உள்ளன. மேலும், 2012-13ம் நிதியாண்டில் முந்தைய நிதியாண்டை விட குறைவான அளவு ஏற்றுமதியே இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெருமளவு வாணிப சமநிலையற்ற தன்மையை ஒரு முக்கியமான விஷயமாக மிகவும் அழுத்தத்துடன் சீன தலைவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய ஏற்றுமதிப் பொருட்களில் குறிப்பாக மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் சீனாவில் வாணிபத் தடைகளை எதிர் கொண்டுள்ளன.

வியாபாரத் தொடர்புகளில் நீடித்திருப்பதன் மூலமாக இந்தியாவுடன் சிறப்பான ராணுவ மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை பராமரிக்க முடியும் என்பது சீனாவின் முக்கிய விருப்பமாக உள்ளது என்று இந்திய வாணிப கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடனான உறவுகளை எப்பொழுதும் மதிக்கும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China has big stake in India’s growing market, may not harm it: Assocham | இந்திய சந்தையில் பெருகி வரும் சீன பங்களிப்பால் பாதிப்பில்லை: அசோசெம்

Chinese stake in the growing Indian market is increasing massively and the current annual trade surplus of over USD 40 billion (about Rs 2,22,000 crore) may touch USD 44 billion by at the end of the current year, an ASSOCHAM analysis of the bilateral trade has shown. Without suggesting for a moment that India should strain its ties with China, ASSOCHAM said, "it is in the best interest of the two neighbourly countries that their relations improve and are cemented through expanding commercial engagement". It said, ASSOCHAM is looking forward to the visit of Chinese Premier next month and is confident that the two countries would be able to resolve their strategic differences, including that of the border.
Story first published: Thursday, May 2, 2013, 17:24 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns