தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களிடம் இருக்கா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களிடம் இருக்கா?
  சென்னை: "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது" என்று வாரன் பஃபட் கூறுவார்.
  அவரின் கூற்று உண்மையாக இருந்தாலும் அந்த கூற்றிலும் விதிவிலக்கு இருக்கிறது.

   

  நமது வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறோம். எனினும் அப்படிப்பட்ட நேரங்களில் கூட பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் வருவதைத் தவிர்க்க முடியாது.

  உதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒருவர் சாலையைக் கடக்கிறார். அப்போது ஒரு குடிகாரர் அவர் மீது இடித்து விடுகிறார். அந்த நடந்து செல்லும் மனிதர் எவ்வளவுதான் கவனமாக போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்துச் சென்றாலும் அவரால் இப்படிப்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது.

  எனவே சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் விபத்துகள் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. இப்படிப்பட்ட விபத்துகள் நடக்கும் போது தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் நமக்கு உதவி செய்கிறது.

  தனிநபர் ஒருவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது படுகாயமடைந்தாலோ அதற்கான இழப்பீட்டை இந்த தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் வழங்கும். குறிப்பாக சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், விமான விபத்துகள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகள் போன்றவற்றின் மூலமாக ஒருவர் இறக்கும் போதோ அல்லது காயமுறும் போதோ இந்த தனி நபர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குகிறது.

  குறிப்பாக இத்தகைய இழப்புகளின் போது பாலிசிதாரருக்கு தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. மேலும் மிகப் பெரிய விபத்து மட்டும் அல்ல சாதாரண விபத்துகளான கால் கைகள் உடைதல் அல்லது மிதிவண்டியிலிருந்து விழுதல் போன்றவற்றிற்கும் இந்த தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்குகிறது.

  எனவே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது நல்லது.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Personal Accident Insurance – Should you opt for it? | தனி நபர் விபத்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களிடம் இருக்கா?

  Personal Accident Insurance denotes an insurance cover, which proposes compensation in case of death, bodily injuries, total/ partial disability or mutilation resulting from an accident. The types of events that are covered under personal accident insurance are rail, road and air accident, injury due to collision or fall, burn injury etc. Your insurance portfolio would be incomplete without a personal accident policy. This type of policy provides financial support to the policyholder if he is disabled after an accident. Even minor accidents are covered by the policy such as breaking a leg or arm, falling from a cycle etc. So, one should use the option and take an accident insurance policy.
  Story first published: Tuesday, May 7, 2013, 14:02 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more