பர்கர் விலையை 5-6 சதவீதம் உயர்த்தும் மெக்டொனால்டு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பர்சை பதம்பார்க்கப் போகும் மெக்டொனால்டு பர்கர்
சென்னை: மெக்டொனால்டு நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்று வருகிறது. குறிப்பாக அந்த நிறுவனம் அதிகமான அளவில் பர்கர் என்ற உணவை இந்தியாவில் விற்று வருகிறது. இந்த நிலையில் மெக்டொனால்டு நிறுவனம் தனது பர்கரின் விலையை 5 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த விலையேற்றத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை கனிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டின் லாபம் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு சேவை வரிசயை அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டு 5 சதவீத விலையேற்றத்தை செய்யவிருக்கிறது. வேறு வழியில்லாமல் இந்த விலையேற்றத்தைச் செய்யவிருப்பதாக மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.

தற்போது இந்திய பணவீக்கம் 8 முதல் 10 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. எனவேதான் தாங்கள் விலையை உயர்த்துவதாக மெக்டொனால்டின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் துணை சேர்மன் அமித் ஜாட்டியா தெரிவித்திருக்கிறார்.

தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் இரட்டை இலக்க எண்களில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய சம்பள உயர்வு மிகவும் குறைவாக இருக்கிறது.

மேலும் கடந்த 2012வது நிதியாண்டில் தங்களுடைய கடைகளில் செய்யப்பட்ட விற்பனை 22 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation bites McDonald's India as it plans price revision again| பர்சை பதம்பார்க்கப் போகும் மெக்டொனால்டு பர்கர்

McDonald's, India's largest fast food chain operator and mostly preferred for its burgers, is raising prices again, said media reports, adding that the rise could be in range of 5-6 per cent.
Story first published: Wednesday, May 8, 2013, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?