
நீங்கள் ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தில் இருந்து வருமானம் பெற இரண்டு வழிகள் உள்ளன. டிவிடெண்ட் மூலம் வரும் வருமானம் மற்றும் டிவிடெண்ட் வருமானத்தை மறுமுதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை தான் அந்த இரண்டு வழிகள்.
நீங்கள் டிவிடெண்ட் வருமானத்தை தேர்வு செய்தால் அதற்கு வரி கட்டத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, இத்தகைய வருமானத்திற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை. மேலும், இந்த வருமானம் நமது மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதில்லை. இந்த விதிமுறை கடன் மற்றும் பங்கு ஈக்விட்டி நிதி திட்டங்களுக்கும் பொருந்தும்.
நீங்கள் டிவிடெண்ட் வருமானத்தை மறுமுதலீடு செய்யும் திட்டத்தை தேர்வு செய்து இருந்து உங்களுடைய பங்கை அதன் நிகர சொத்து மதிப்பில் விற்க நேரிட்டால் அதன் லாபத்தை பொருத்து மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
ஈக்விட்டி பரஸ்பர நிதி திட்டத்தில் நீண்ட கால மூதலீட்டிற்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் குறுகிய கால மூதலீட்டிற்கு 15 சதவீத மூலதன ஆதாய வரி இந்த திட்டத்தில் விதிக்கப்படுகிறது.
கடன் திட்டங்கள் மீது கடைபிடிக்கப்படும் மூலதன ஆதாய நடைமுறைகள்:
நீண்ட கால மூலதன ஆதாயம்: 20 சதவீதம் (விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்டால்) அல்லது 10 சதவீதம் (விலை குறியீட்டுடன் இணைக்கப்படவில்லை எனில்) என்ற விகிதத்தில் வரி, அதனுடன் கூடுதல் கட்டணம் மற்றும் கல்வி செஸ்
குறுகிய கால மூலதன ஆதாயம்: வரி செலுத்தும் நபருக்கு பொருந்தும் சாதாரண விகிதத்தில் வரி விதிக்கபடும்.
பரஸ்பர நிதிகள் மூலமாக ஏன் முதலீடு வேண்டும்?
பங்கு வர்த்தகம் பெரும்பாலும் ஆபத்தானது மற்றும் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை எனில் உங்களுடைய பணத்தை இழந்து விடுவீர்கள். எனவே, நீங்கள் பரஸ்பர நிதியின் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. மேலும், நீங்கள் ஈக்விட்டி பரஸ்பர நிதி திட்டங்களின் ஆதாய விருப்பத்தை தேர்வு செய்தால் வரி இல்லா வருமானம் பெறலாம். நீங்கள் அதிக வருமானத்தை பெற விரும்பினால் ஈக்விட்டி பரஸ்பர நிதி திட்டங்கள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். இத்தகைய முதலீடுகள் ஆபத்தானது மற்றும் வருமானத்திற்கு வங்கி வைப்புத் தொகை போன்ற உத்தரவாதமும் கிடையாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications