ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை!

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை!
சென்னை: இந்திய அரசு மானிய விலையில் 9 கேஸ் சிலிண்டர்களை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது நேரடி மானியத் தொகைத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக 20 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஆதார் அட்டையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பெற வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை, ஆதார் அட்டை தொடர்பில் இருக்கும் வங்கிக் கணக்கில் அரசு செலுத்த முடியும்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில்,

ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது என்பது நேரடி மானியத் தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசு மானியம் தொடர்ந்து பெற வரும் ஜூன் தொடங்கி மூன்று மாதத்திற்குள் அனைவரும் ஆதார் அட்டையைப் பெற்று அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். மானிய விலையில் முதல் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போதே அதற்கான மானியத் தொகையும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சென்றடையும். அதுவும் சிலிண்டர் வாங்குவதற்கு முன்கூட்டியே மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் சந்தை விலையில் கேஸ் சிலிண்டர் பெறும் சுமையை ஆரம்பத்தில் இருந்தே அகற்றலாம்.

பதிவு செய்த கேஸ் சிலிண்டர் கிடைத்த உடனே அடுத்த சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கைச் சென்றடையும். அடுத்த சிலிண்டரை சந்தை விலையில் பெற்றுக் கொள்ள இது ஏதுவாக இருக்கும் என்றார்.

ஆந்திர பிரதேசம், தாமன் அன்ட் தையு, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப், கோவா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து 20 மாவட்டங்கள் இதில் அடங்கும். இந்த 20 மாவட்டங்களில் சுமார் 89 சதவிகித மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட பாதி ஆதார் அட்டைகள் மட்டுமே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 20மாவட்டங்களில் 85 லட்சம் கேஸ் இணைப்பு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

ஆதார் அட்டை மற்றும் அதனை வங்கிகளிடம் இணைப்பதின் அவசியம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Get Aadhar card by August this year to avoid losing LPG subsidy | ஆகஸ்ட்டுக்குள் ஆதார் அட்டை வாங்காவிட்டால் கேஸ் சிலிண்டர் மானியம் இல்லை!

Domestic LPG customers in 20 districts will have to get their Aadhar card made and linked with the bank account by August this year to avail the subsidy on nine cylinders.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns