கருப்பு பண பரிமாற்றத்தால் இவ்வளவு பிரச்சனைகளா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீங்கள் எப்பொழுதாவது உங்களுடைய ஆடைகளை சுத்தம் (அதாவது துவைப்பது) செய்திருக்கிறீர்களா? நாம் துணிகளை துவைத்த பின் அவை அழுக்கு நீங்கி சுத்தமாக தோன்றுகிறது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் நடைமுறையும் அதே போன்ற விளைவை உண்டாக்குகிறது. அதாவது இந்த நடைமுறை கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி தருகிறது. கருப்பு பணம் (அடிப்படையில் ரொக்கப் பணம்) என்பது இங்கே கையாடல், லஞ்சம், குற்றம், மோசடிகள் போன்ற முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை குறிக்கும்.

நீங்கள் கருப்பு பணத்திற்கு வரி செலுத்த வேண்டாம். ஏனெனில் அந்த பணத்தை பற்றி நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிய வந்தால் அதை பறிமுதல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றாத வரை நீங்கள் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது.

நாட்டின் பெரிய தலைவலி கருப்பு பணம்

தற்பொழுது நம் நாட்டில் விவாதிக்கப்படும் தலைப்பாக கருப்பு பண பரிமாற்றம் மாறிவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வங்கித் துறையும் இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி கோப்ரா போஸ்ட் வெளியிட்ட செய்திகளை தொடர்ந்து இத்தகைய பரிமாற்ற நடைமுறைகளை குறைப்பது தொடர்பான கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தும்படி நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கருப்புப் பணப் பரிமாற்றம் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறி விட்டது. இதனுடைய தீவிர சமூக பொருளாதார தாக்கம் அளவிட முடியாதது.

கருப்பு பணத்தின் பொருளாதார தாக்கம்

சர்வதேச நிதித்துறை கட்டுப்பாட்டாளர்கள் சர்வதேச அளவில் கருப்பு பண மோசடியை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இது பொருளாதாரத்தில் பக்க விளைவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். எந்த வரியும் செலுத்தாமல் கருப்புப் பண பரிமாற்றம் மூலம் நிதித்துறையில் நுழையும் இத்தகைய பணம் யாரோ ஒருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நம்முடைய நாடும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

போலி நிறுவனங்கள்

கருப்பு பண பரிமாற்றத்திற்காக ஊக்குவிக்கப்பட்ட ஷெல் நிறுவனங்களின் ஆட்கள் சிக்கினால் அவை திவாலாகிவிடும். அவை திவாலானால் அந்த நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடு எந்த பொருளாதார லாபத்தையும் தராமல் வீணாக போகும். இது போன்ற நிறுவனங்களுக்கு நிதி உதவு செய்த வங்கிகளும் இதனால் பாதிப்படைகின்றன.

ஊழலை ஊக்குவிக்கும் கருப்பு பணம்

கருப்பு பணப் பரிமாற்றம் உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளியை திரித்து ஒரு தவறான பொருளாதார கொள்கை அறிவிப்புகளுக்கு வழிவகுத்து விடுகின்றது. அத்தகைய பொருளாதார கொள்கைகள் பொய்யான தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிறிது சிறிதாக நீர்த்து போகின்றன. மேலும், இத்தகைய கருப்பு பண பரிமாற்றம் சமுதாயத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பணமோசடி, ஊழல், குற்றங்கள் மற்றும் மோசடிகளை அதிகரிக்கச் செய்கிறது. இத்தகைய மோசடிப் பேர்வழிகளை கண்ணுறும் அப்பாவி பொது மக்களும் இந்த பாதையை தேர்வு செய்ய ஊக்குவிக்கபடுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money, corruption, rules, ஊழல்
English summary

What is money laundering? | இவ்வளவு பிரச்சனைகளா

Have you ever washed clothes (Laundering, I mean)? Laundering of clothes makes dirty cloth appear clean. Money laundering has the same effect - it makes dirty money appear clean. Dirty money (basically cash) here means the money earned from illegitimate sources like embezzlement, bribes, crime, frauds etc. You do not pay taxes on dirty money and there is a fear of seizure once it comes to the knowledge of regulators. So, basically, you cannot use dirty money until it's cleaned via money laundering process.
Story first published: Monday, May 20, 2013, 12:53 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns