வருமான வரி ரீபண்ட்டை இழுத்தடிக்கிறாங்க: எப்படி புகார் செய்வது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி ரீபண்ட்டை இழுத்தடிக்கிறாங்க: எப்படி புகார் செய்வது?
சென்னை: வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காததனால் மன உளைச்சலுக்கு ஆளானவரா நீங்கள்? அப்படியெனில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள். தாமதமான அல்லது மறந்தே போயிருக்கக்கூடிய ரீஃபண்ட் பற்றிய உங்கள் குறைகளைப் பற்றி புகார் அளிக்க நீங்கள் வருமான வரி குறைதீர்ப்பாணையத்தை அணுகலாம்.

 

வருமான வரி குறைதீர்ப்பாணையம், வருமான வரி ரீஃபண்ட் மனக்குறைகள் மட்டுமல்லாது பல்வேறு வகைப் பிரச்சினைகளையும் கையாள்கிறது. இப்பிரச்சினைகள் வட்டி விலக்கு மனுக்கள், மேல்முறையீடு உத்தரவுகளின் நிறைவேற்றம், மனுக்களில் பிழைதிருத்தங்கள் செய்தல், கையகப்படுத்தப்பட்ட அகௌண்ட் புத்தகங்களின் வெளியீடு, பான் ஒதுக்கீடு, பான் கார்டுகளை வழங்குதல், கட்டிய வரி கிரெடிட் ஆகாமை போன்ற ஏதாவதொன்றாக இருக்கலாம்.

நீங்கள் குறைதீர்ப்பாணையத்தை அணுகும் முன், எழுத்து வடிவில் உங்கள் புகாரை உங்கள் வருமான வரி அதிகாரியிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். நீங்கள் அளித்த புகார் உங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் கையாளப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், அல்லது உங்கள் புகார் குறிப்பிட்ட அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டால், அல்லது உங்கள் புகாரை சமர்ப்பித்தபின் வருமான வரி அலுவலரிடமிருந்து 30 நாட்களுக்குள் அதற்கான பதில் மொழி எதுவும் வராவிட்டால் மட்டுமே இந்த பிரச்சினையை நீங்கள் குறைதீர்ப்பாணையத்துக்குக் கொண்டு செல்ல இயலும். வருமான வரி அலுவலரிடமிருந்து பதில் வருவதற்கு 30 நாட்கள் காத்திருந்த பின் ஒரு வருடத்திற்குள் குறைதீர்ப்பாணையத்தில் உங்கள் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம்.

நீங்கள் ஆன்லைனிலும் உங்கள் புகாரை சமர்பிக்கலாம். அவ்வாறு சமர்பிக்கும் பட்சத்தில் அதனை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து நீங்கள் கையொப்பமிட்ட பின் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். புகாரில் பின்வருவனவற்றை தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியம்.

1) புகார் அளிப்பவரின் பெயர், முகவரி மற்றும் பான் நம்பர்

2) புகார் சுமத்தப்படும் அலுவலரின் பெயர் மற்றும் பதவி

3) புகார் அளிப்பதற்கு அடிப்படையாக இருந்த உண்மைகள் - அதனை நிரூபிக்கக்கூடிய துணை ஆவணங்கள்

4) குறைதீர்ப்பாணையத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடிய நிவாரணம்

வருமான வரி குறைதீர்ப்பாணையத்தின் தற்போதைய அதிகார வரம்பு பின்வருமாறு:

1. மும்பை (மும்பை அதிகார வரம்பு)

2. டெல்லி (தேசிய தலைநகர் பிரதேசம்)

3. பெங்களூரு (கர்நாடகா, கோவா)

4. கான்பூர் (உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல்)

5. சென்னை (தமிழ்நாடு, பாண்டிச்சேரி)

6. புனே (மகாராஷ்டிரா (-மும்பை தவிர்த்து))

7. கொல்கத்தா (மேற்கு வங்கம், ஒடிஷா, வட கிழக்கு மாநிலங்கள், ஜார்கண்ட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்)

8. அகமதாபாத் (ராஜஸ்தான், குஜராத், டாமன் அன்ட் தையூ, தாத்ரா அன்ட் நாகர் ஹவேலி)

9. ஹைதராபாத் (ஆந்திரப்பிரதேசம்)

10. சண்டிகர் (இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர்)

11. போபால் (மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்)

12. கொச்சின் (கேரளா, லட்சத்தீவு)

Interlnk: https://www.goodreturns.in/news/2013/05/21/how-file-complaint-a-delay-income-tax-refund-176914.html

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to file complaint for a delay in income tax refund? | வருமான வரி ரீபண்ட்டை இழுத்தடிக்கிறாங்க: எப்படி புகார் செய்வது?

If you have a grievance relating to non receipt of income tax refund, here's what you can do. You could approach the Income Tax Ombudsman with your claims regarding a refund, which has been delayed or probably even forgotten.
Story first published: Wednesday, May 22, 2013, 16:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X