வைஷ்ணோ தேவி படத்துடன் கூடிய 5 ரூபாய் நாணயம்: அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கி

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வைஷ்ணோ தேவி படத்துடன் கூடிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிடும் ஆர்.பி.ஐ.
சென்னை: வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவையொட்டி மத்திய ரிசர்வ் வங்கி புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியடப்போகிறது

(6 things to remember while filing your tax returns)

இன்னும் சிறிது நாட்களில் மத்திய ரிசர்வ் வங்கி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு புதிய ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியடப் போகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில்,

"அந்த நாணயத்தின் முகப்பில் சிங்கத்துடன் உள்ள அசோகா தூண் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் சத்யமேவ ஜெயதே என்ற வாசகமும் கீழே பொறிக்கப்பட்டிருக்கும். இடது பக்கம் "பாரத் இன் தேவ்னகிரி" என்றும் வலது பக்கம் "இந்தியா" என்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்திய ரூபாயின் சின்னமும் '5' என்ற எண்ணும் சிங்க சின்னத்துக்கு கீழ் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் மறுபக்கத்தில் மாதா வைஷ்ணோ தேவியின் படம் மையப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும். படத்திற்கு மேல் 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியம்' என்று தேவனகிரி மொழியில் எழுதப்பட்டிருக்கும். படத்திற்கு கீழ் அதுவே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

இந்த படத்திற்கு கீழே '2012' என்ற வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். வருடத்திற்கு கீழே 'சில்வர் ஜுபிலி' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: rbi, coins, நாணயம்
English summary

RBI to issue Rs 5 denomination coins on Vaishno Devi | வைஷ்ணோ தேவி படத்துடன் கூடிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிடும் ஆர்.பி.ஐ.

The Reserve Bank of India (RBI) will, in the near future, put into circulation Rs 5 denomination coins to commemorate the occasion of Silver Jubilee of Shri Mata Vaishno Devi Shrine Board.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns