110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதம் கட்டும் வால்மார்ட்!

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதம் கட்டும் வால்மார்ட்!
உலக அளவில் சில்லறை வணிகத்தில் கொடி கட்டி பறக்கும் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியதற்காக 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாகச் செலுத்த உறுதியளித்திருக்கிறது.

இயற்கை வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், அபரிவிதமான கழிவுகள் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகளைத் தவறாக் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக, வால்மார்ட் நிறுவனத்தின் மீது ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதாவது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள், வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராக பொதுநல வழஙக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், அமெரிக்காவின் கிளீன் வாட்டர் சட்டத்தின் 6 பிரிவுகளை வால்மார்ட் மீறிய குற்றத்திற்காக, 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர்.

அதாவது சட்டத்திற்கு புறம்பாக, அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கிளைகள், அபிரிவிதமான கழிவுகளை கையாளுதல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது. தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை வால்மார்ட் கட்டிவிடுவதாக உறுதியளித்திருக்கிறது.

தேசிய பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைகொல்லிகள் மற்றும் எலிக்கொல்லிகள் சட்டத்திற்கு (FIFRA) எதிராக வால்மார்ட் நிறுவனக் கிளைகள் குற்றம் செய்திருக்கின்றன. குறிப்பாக பூச்சிக்கொல்லி, பூஞ்சைக்கொல்லி மற்றும் எலிக்கொல்லி மருந்துகளை வால்மார்ட் முறையாக பாதுகாத்து வைக்கவில்லை மற்றும் முறையாக கையாளவில்லை என்று கூறி அமெரிக்காவில் வாழும் வால்மார்ட் வாடிக்கையாளர்கள் அந்த மருந்துகளை வால்மார்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் எதிராக 3 குற்றப் பிரிவு சட்டங்களுக்கு கீழ் அமெரிக்க நீதித் துறையும், ஒரு சிவில் பிரிவு சட்டத்தின் கீழ் அமெரிக்க சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு (EPA) வழக்கைத் தொடுத்திருக்கின்றன. இந்த குற்றங்களுக்காக வால்மார்ட் தோராயமாக 81.6 மில்லியன் டாலர்களை அபராதமாகச் செலுத்தும் என்று தெரிகிறது.

மேற்சொன்ன வழக்குகளோடு, அதே குற்றங்களுக்காக கலிபோர்னியா மற்றும் மிசௌரி போன்ற மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்கும் சேர்த்து, வால்மார்ட் 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நிதித்துறை தெரிவித்திருக்கிறது.

கழிவுகளை கையாள ஒரு முறையான திட்டத்தை வால்மார்ட் வைத்திருக்கவில்லை. அதுபோல் அந்த கழிவகளை முறையாகக் கையாள தனது ஊழியர்களுக்க சிறப்பு பயிற்சியையும் வால்மார்ட் அளிக்கவில்லை என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதனால் அந்த கழிவுகள் முனிசிபால் குப்பைத் தொட்டிகளில் அளவுக்கு அதிகமாக பாதுகாப்பின்றி கொட்டப்பட்டன. அதுபோல் நீர்க் கழிவுகள், அரசு கழிவுக் குழாய்களில் பாதுகாப்பின்றி ஊற்றப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 4000 கிளைகளை வால்மார்ட் வைத்திருக்கிறது. எரியக்கூடிய, பின்விளைவுகளை எற்படுத்தக்கூடிய பல பொருள்களை விற்பனை செய்கிறது.

சட்டக் கெடுபிடி அதிகமாக இருக்கும் அமெரிக்காவிலேயே வால்மார்ட் தனது வேலையைக் காட்டுகிறது என்றால், சட்டங்களில் அதிகமான ஓட்டைகளைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு வரும் வால்மார் எப்படிப்பட்ட ஆட்டம் ஆடப் போகிறதோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: சட்டம்
English summary

Walmart agrees to pay over $110mn for environmental crimes

US retail giant Walmart has pleaded guilty to charges of environmental crimes, including mishandling of hazardous waste and pesticides, and agreed to pay a total of $110 million to settle the cases.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns