வீட்டுக் கடன் வேணுமா? எஸ்பிஐ தாங்க சூப்பர்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடன் வேணுமா? எஸ்பிஐ தாங்க சூப்பர்!
வீட்டுக் கடன் என்று வந்துவிட்டால், ஸ்டேட் வங்கியைப் போன்ற சிறப்பான, குறைவான வட்டி கொண்ட வங்கி வேறொன்றுமில்லை. ஸ்டேட் வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நன்மைகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

 

(Salary slips of top India executives to come under scanner)

1) மற்ற வங்கிகள் மற்றும் கடன் தரும் நிறுவனங்களை விட, ஸ்டேட் வங்கி மிகக் குறைந்த ஃப்ளோட் வட்டியுடன் கூடிய வீட்டுக் கடனை கொடுக்கிறது. 9.95 சதவிகித ப்ளோட் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது ஸ்டேட் வங்கி. எச்.டி.எப்.சி, எல்ஐசி மற்றும் இதர நிறுவனங்கள் தரும் வட்டி விகிதங்களை விட மிகவும் குறைவு. எச்.டி.எப்.சி வங்கி 10.15 சதவிகிதமும், பிற பொதுத் துறை வங்கிகள் 10.25 சதவிகிதமும் வட்டி நிர்ணையித்துள்ளன. ஸ்டேட் வங்கியை ஒப்பிடும்போது வட்டி விகிதம் மிகவும் அதிகமாகும்.

2) மற்றவர்களை விட மிகவும் குறைவான ப்ராசசிங் கட்டணம் வகுத்துள்ளது ஸ்டேட் வங்கி. மற்ற வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்கள் 0.5 சதவிகித கடன் தொகையை ப்ராசசிங் கட்டணமாக வசூலிக்கின்றன. ஸ்டேட் வங்கி 0.25 சதவிகித ப்ராசசிங்க் கட்டணம் வசூலிக்கிறது.

3) வீட்டு மதிப்பிற்கு ஏற்றார் போல சரியான கடன் தொகையை வழங்குதல்

20 லட்சத்திற்குட்பட்ட வீடுகளை வாங்கும்போது, அதில் அதிகபட்சமாக 90 சதவிகித தொகையை கடனாக வழங்குகிறது ஸ்டேட் வங்கி. பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக, ஸ்டேட் வங்கியில் கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும். ஆனால் இங்கு கடன் பெறுவதில் கிடைக்கும் நன்மைகளை வைத்துப் பார்க்கும் போது இந்த அலைச்சல் நிச்சயமாக நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்டேட் வங்கியில் இல் ஹோம் லோன் பெறத் தேவையான ஆவணங்களும், பத்திரங்களும்:

* பூர்த்தி செய்யப்பட்ட லோன் விண்ணப்பப் படிவம்

* பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

* அடையாளச் சான்று ( வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுனர் உரிமம் / வருமான வரி பேன் அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்)

* முகவரிச் சான்று ( தொலைபேசி கட்டண ரசீது அல்லது மின் இணைப்பு ரசீதின் நகல்)

* சொத்து வரி ரசீது / பாஸ்போர்ட் / வாக்காளர் அடையாள அட்டை

* தொழில்முனைவோராக இருப்பின், அந்நிறுவனத்திற்கான முகவரி

* கடந்த ஆறு மாதத்திற்கான வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது வங்கிக் கணக்கு புத்தகம்.

* தற்போது கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிடமிருந்து கையொப்ப அடையாள சான்று

* சொந்த சொத்து மற்று கடன் நிலவரம் தொடர்பான அறிக்கை.

வீடு வாங்கணும் என்ற திட்டத்தில் இருப்பவர்கள், வீட்டுக் கடன் தொடர்பாக ஸ்டேட் வங்கியை போய் பார்த்துட்டு வந்துடுங்க...!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Home Loans: 3 reasons to opt for them

Home loans from State Bank of India are by far the best and the cheapest when compared to peers and housing financial institutions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?