மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% இருந்து 5% சரிந்தது!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டு ஆட்சி கட்டிலில் ஏறியது அதற்கு, முந்தைய வாஜ்பாய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள், பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்கிற அளவில் மிகவும் வலிமையாக இருந்தது. பொருளாதார புலியான மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் கட்ட ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. 2012-2013 ஆண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 5 சதவீதமாக குறைந்து விட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். இந்த நிலைமைக்கு என்னென்ன காரணங்கள் பிண்ணணியில் உள்ளன எனத் தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

சுரங்கத் துறை குழப்பம்
 

சுரங்கத் துறை குழப்பம்

சுரங்க துறை, தொழில்துறை வளர்ச்சி விகிதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை குறைத்து விட்டது. எரி சக்தி மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்கள் சுரங்கத் தொழிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தெளிவான கொள்கைகள் இல்லாதது, மற்றும் சட்டவிரோத சுரங்கம் போன்றவை பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் குறைந்ததற்கு முக்கிய காரணமாகிவிட்டது. கடலோர காவல்படையினரால் சட்ட விரோத சுரங்க செயல்பாட்டிற்காக பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஒரு மணல் படகை படத்தில் காணலாம். இது நாட்டில் நடைபெறும் சட்ட விரோத சுரங்கத் தொழிலிற்கு ஒரு சிறிய சாட்சியாகும்.

செயலிலந்த கொள்கை

செயலிலந்த கொள்கை

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை துணிவுடன் செயல்படுத்த முடியவில்லை. இதற்கு அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக அமைந்தது. கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தை விலக்கி சீர்திருத்தத்தை தொடங்குவதற்குள் காலம் கடந்து விட்டது. அது இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய சேதத்தை விளைவித்து விட்டது.

விவசாய துறை

விவசாய துறை

இந்திய வேளாண்மை துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த துறையின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான உத்வேகத்தை வழங்க தவறிவிட்டது. நம்மிடையே போதுமான சேமிப்பு வசதிகளும் இல்லை, பண்ணை பொருட்களை விரயமாகாமல் தடுப்பதற்கான வழிகளும் இல்லை.

லஞ்சம்
 

லஞ்சம்

அரசாங்கத்தின் கவனத்தை நிறைய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் திசை திருப்பி விட்டது. 2 ஜி ஊழல், கோல் கேட் ஊழல், ரயில் கேட் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சமாளிக்க திணறி வரும் இந்த மத்திய அரசு, எப்படி தொய்வுறலில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்?.

தொழில் துறை

தொழில் துறை

ஒவ்வொரு மாதத்திற்கான IIP தரவுகள், தொழில் துறையின் படுமோசமான நிலையை வெளிப்படுத்துகிறது. உட்கட்டமைப்பு வளர்ச்சி இல்லாமை, நில சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தாமதம், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை காலம் கடத்துவது போன்ற காரணிகள் தொழில் துறையின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகி விட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From 8% GDP to 5% GDP: Well done UPA!

The UPA government when it first came to power in 2004 inherited a robust and buoyant economy from the Vajpayee government growing at 8 per cent per annum.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?