இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் பெரும் சரிவு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் பெரும் சரிவு!!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அல்லது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மார்ச் 31, 2013 இல் முடிவுற்ற 4 வது காலாண்டில் 4.8% மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2013அம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 சதவீததிற்கும் குறைந்துள்ளது .இது முந்தைய ஆண்டுகளில் 9% இருந்தது குறுப்பிடத்தக்கது. மின்சாரம் மற்றும் சுரங்க துறைகளில் உள்ள மிக மோசமான வளர்ச்சி விகிதங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

( Indian manufacturing activity slows in April: HSBC PMI )

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அறிவிக்கப்பட்டவுடன் பங்கு சந்தை புள்ளிகள் சென்செக்ஸ் 220 வரை சரிந்துள்ளது. மேலும் அந்நிய சலவனி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் இல்லாத அளவிற்கு ரூபாய் 55.51 ஆக சரிந்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறை அமைச்சகம், 2012-2013ஆம் ஆண்டிற்கான நாட்டின் இடைக்கால வருமானம் மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெளியிட்டுள்ளனர்.அதன்படி விவசாய துறை நான்காம் காலாண்டில் 1.4 சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி துறை 2.6 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சி விகிதம் பின்வருமாறு:'விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி துறை'(1.4 சதவிகிதம்), 'சுரங்கம் மற்றும் குவாரி துறை'(-3.1 சதவிகிதம்) 'உற்பத்தி துறை'(2.6 சதவிகிதம்), 'மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் விநியோக துறை'(2.8 சதவிகிதம்), 'கட்டுமான துறை'(4.4 சதவிகிதம்), 'வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறைகள்' (6.2 சதவிகிதம்), 'நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சேவை துறைகள்' (9.1சதவிகிதம்), மற்றும் 'சமூகம், சமூக மற்றும் தனிப்பட்ட சேவை துறைகள்' (4.0 சதவிகிதம்).

2012-2013ஆம் ஆண்டுகளில் கட்டுமான துறையின் முக்கிய காரணிகளான சிமெண்ட் 5.6 சதவீத வளர்ச்சியும் நிறைவுசெய்யப்பட்ட நுகர்வு ஸ்டீல் பதிவு துறை 3.3 சதவிகிதம் வளர்ச்சியையும் கண்டுள்ளது .இவை ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் முறையே 6.1 சதவிகிதம் மற்றும் 3.9 சதவிகித வளர்ச்சியை கண்டிருந்தது. இதன் விளைவாக 5.9 சதவீதம் எட்ட வேண்டிய இந்த துறை 4.3 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Q4 GDP at 4.8%; FY 2013 GDP is worst in a decade

India's GDP or economic growth rates for the 4th quarter ending March 31, 2013 has come in line with estimates at a hugely disappointing 4.8 per cent. The whole year GDP for FY 2013 at 5 per cent is the worst seen in almost a decade and is way below the 9 per cent recorded a few years back.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X