மின் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்கும் இந்திய அரசு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்கும் இந்திய அரசு!!
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியிலிருந்து, மின்சாரம் தயாரிக்க மின் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அனுமதியளித்ததன் காரணமாக மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 15 பைசா முதல் 17 பைசா வரையிலும் உயர வாய்ப்பிருக்கிறது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இந்த முன்மொழிவிற்கான அனுமதியை வழங்கியுள்ளதால், அதன் விளைவாக மின் கட்டணம் உயரலாம் என்று நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.'மின் கட்டணம் சிறிய அளவில் உயரும். இது நிலக்கரி இறக்குமதி செய்ய ஆகும் அளவிற்கேற்ற வகையிலான மிகவும் குறைந்த உயர்வே' என்றும் அவர் ஊடகங்களில் இதை விவரித்துள்ளார்.

 

மேலும், 'அவர்கள் (தனியார் மின் உற்பத்தியாளர்கள் - IPP's) விரும்பினால் அவர்களாகவே நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளாலம் அல்லது இந்திய நிலக்கரி நிறுவனம் இதனை இறக்குமதி செய்யும் என்பதால் இதற்கான இறக்குமதி செலவினங்களின் காரணமாக மின் கட்டணம் உயரும்' என்று அவர் கூறியுள்ளர்.

 

'சற்றே செலவு செய்து மின்சாரத்துடன் இருப்பது, மின்சாரமே இல்லாமல் இருப்பதை விட நல்ல விஷயம். கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள நமது மின் உற்பத்தி நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் முடங்கிக் கிடப்பதை விட, அவை மின் உற்பத்திக்காக வேலை செய்வதும் நல்லது. இன்று உற்பத்தியாகும் ஒவ்வொரு மெகாவாட்டிற்கும் 5 முதல் 6 கோடிகள் முதலீடாக இருக்கும்' என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி துறை அலுவலர் ஒருவர், இந்த நடவடிக்கையின் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார். 'ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலக்கரியின் அளவு மதிப்பிடப்படாவிட்டாலும், தற்போதைய கணக்கீடுகளின் படி 15 சதவிகிதம் நிலக்கரியை இறக்குமதி செய்தாலே ஒரு யூனிட்டிற்கு 15 பைசா முதல் 17 பைசா வரையில் மின் கட்டணம் உயரும்' என்று அவர் கூறினார்.

'அரசும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் எடுத்து வருவதாகவும் மற்றும் 'ஜுலை முதல் வாரத்தில் எடுக்கப்படும் சில முடிவுகளால் மேலும் சில நிலக்கரி சுரங்கங்கள் திறக்கப்பட்டு, அவற்றிலிருந்தும் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும்' என்றும் ப சிதம்பரம் கூறினார். இந்த இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

'இந்த இடைப்பட்ட காலத்தில் வேறு வழியில்லாததால் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. உள்ளூரில் உற்பத்தியாகும் நிலக்கரியை விட, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகம். இந்திய நிலக்கரி நிறுவனம் இப்பொழுதிருக்கும் 65 சதவிகிதத்தை 12-வது திட்டத்தின் முடிவில் 75 சதவிகிதமாக மாற்றி, இதனடிப்படையில் 78,000 மெகா வாட் அளவிற்கு உற்பத்தி செய்ய உறுதி கூறுகிறோம்' என்று கூறினார்.

இந்தியாவில் நிலக்கரி மற்றும் எரிவாயு உற்பத்தி குறைவாக இருப்பதால் மின் உற்பத்தியில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வருவதாக ப சிதம்பரம் கூறுகிறார்.மின் கட்டண உயர்வைப் பற்றி அவர் கூறும் போது, 'இன்றைய நிலையில் மின் கட்டண உயர்வை நாம் மதிப்பிட முடியாது மற்றும் அது ஒரே மாதிரியாகவும் இருக்காது. இது ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திற்கும் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து, மாறுபட்டு இருக்கும்.'

இறக்குமதி அளவின் மதிப்பீடுகளை கணிப்பதில் உள்ள சிக்கல் பற்றி அவர் கூறும் போது, 'நம்மால் 65 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரையிலும் உள்ளூரில் நிலக்கரி உற்பத்திய செய்யப்படாவிட்டாலும் மற்றும் நிலக்கரி உற்பத்தி அதிகரித்தாலும் யூனிட் கணக்கீட்டில் மிகவும் குறைவான அளவே விலை உயரும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஏற்ற வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, மின் கட்டண உயர்வினை தற்போது உறுதியிட்டு சொல்வது மிகவும் கடினம் என்றும் மின்சாரத்துறை அலுவலர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

எனினும், நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், இதனால் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு இந்திய நிலக்கரி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படும் எரிபொருள் வழங்கும் ஒப்பந்தங்களையும் (Fuel Supply Agreements - FSA's) பாதிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த இறக்குமதி நடைமுறை 2009-க்குப் பிறகு 78,000 மெகாவாட் உற்பத்தியைத் தொடங்கிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு பொருந்தும்.

இந்த முன்மொழிவின் படியான இறக்குமதி நடைமுறையின் போது, இறக்குமதி செய்யப்படும் மொத்த நிலக்கரி மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரி ஆகியவற்றின் விலைகள் சராசரியாக கணக்கிடப்பட்டு, முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ள விலை கூட்டு நடைமுறையில் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் குறைவான விலையில் எரிபொருள் பெறுவதை வேண்டி, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் உள்ளூரில் உற்பத்தியாகும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகளை இணைக்க அரசாங்கம் முயன்று வருகிறது.

அரசும் இந்திய நிலக்கரி நிறுவனம் 65% நிலக்கரியை உள்ளூரில் வழங்கவும், 15% நிலக்கரியை வெளிநாடுகளின் சந்தைகளிலிருந்து பெறவும் பரிசீலனை செய்து வருகிறது. முன்னதாக, மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, எரிபொருள் வழங்கும் ஒப்பந்தத்திற்கான (FSA) குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலை அரசும் வெளியிட்டு குறைந்தபட்சம் 80 சதவிகிதம் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்துள்ளது.

தற்பொழுது 62 எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களில் இந்திய நிலக்கரி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் நிறுவனங்களில் 69 மின் உற்பத்தி நிலையங்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறைப் படுத்த வேண்டியிருக்கிறது, இவற்றில் 29 நிறுவனங்கள் NTPC (National Thermal Power Corporation) மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவையாகும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்படும் நிலக்கரியின் தரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளால், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இந்த எரிபொருள் வழங்கும் ஒப்பந்தத்தில் பங்கேற்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்யும் இந்த நடவடிக்கையால் மின் உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களும் பயன் பெறும் என்று மின் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் புகழ்ந்துள்ளன.

மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (Association of Power Producers - APP) தலைமை இயக்குநர் அசோக் குரானா, 'நாங்கள் மிகவும் மகிழச்சியாக இருக்கிறோம். எங்களுடைய இரண்டாண்டு உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. இந்த முடிவினால் 78,000 மெகா வாட் அளவிற்கு கிடைக்கும் மின் உற்பத்தியில், 38,000 மெகா வாட் அளவு புதியதாக உற்பத்தியாகும்.' ஏன்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரி 18-ம் நாள் பிரதமரை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Power rates to rise as govt okays pass through for coal import

Electricity tariff across the country will increase by a minimum 15 to 17 paise per unit after the government on Friday allowed power producers to pass on higher cost of imported coal to consumers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X