பொருளாதார மந்த நிலையை மீட்டெடுப்பதில் அரசு தீவிரம்- ப.சிதம்பரம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதார மந்த நிலையை மீட்டெடுப்பதில் அரசு தீவிரம்- ப.சிதம்பரம்
திடீரென்று 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவு பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் ஆனது ஒரு துரதிர்ஷ்டமான காரியம் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். எனினும் இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழலைப் பற்றி எவரும் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும், இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் இந்திய அரசு அதி தீவிரமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, பல்வேறுபட்ட துறைகளில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீடுகளின் அளவு விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் இது சம்பந்தமான கூட்டம் வரும் ஜூலை 2 அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

"மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்து இந்தியா இருக்கிறது. எனவே இந்தியா தனது மந்தமான பொருளாதார நிலையிலிருந்து மிக விரைவில் மீண்டு எழுந்துவிடும். எனவே முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்பதை மிக விரைவில் புரிந்து கொள்வார்கள். தற்போது நிலவும் இந்த மந்த நிலை மிக விரைவில் சரியாகிவிடும். எனவே இந்திய பொருளாதார நிலையைப் பற்றி எவரும் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை" என்று சிதம்பரம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் சேர்மன் பென் பெர்னான்கே கூறியது "இரண்டு வாரங்களுக்குள், இந்தியாவிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பணம் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் ஆகிவிட்டது" என்ற தகவல் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பு மிக நிலையாக இருக்கிறது. அதிக அளவிலான பணம் இந்தியாவிற்கு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையில் ஏறக்குறைய 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இந்தியாவிற்குள் பணம் வந்திருக்கிறது. ஆனால் பெர்னன்கே கூறியிருக்கும் "இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் ஆகியிருக்கிறது" என்று செய்தி மிகவும் துரதிர்ஷடமானது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt moving ahead with reforms, no need for pessimism: FM

Terming the sudden outflow of USD 5 billion as "unfortunate", Finance Minister P Chidambaram has said that there should, however, be no room for pessimism as fundamentals of the economy are intact and government is moving ahead on the reforms path.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X