பங்குச் சந்தையில் ரத்தக் களரி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச் சந்தையில் ரத்தக் களரி!!!
உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள், குறிப்பாக இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தில் ரத்தக் களரியுடன் காணப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில், அமெரிக்க, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக, அந்த நாடுகளில் உருவான அதிக்கப்படியான பணப்புழக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடாக மாறியது.

இத்தகைய பணம் என்பது குவான்டிடேடிவ் ஈசிங்' மூலம் உருவாக்கப் பட்டதாகும். அதாவது செயற்கையான முறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது. இந்த முறையில் ஒரு நாட்டின் மத்திய வங்கி நலிவடைந்த நிறுவனங்களின் சொத்துக்களை அதிகப் பணத்திற்கு வாங்கிக் கொள்ளும். அந்த பணமானது சந்தைக்கு வரும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். இத்தகைய நடைமுறை பணவீக்கம் குறைவாக இருக்கும் பொழுது அதை அதிகப்படுத்தவோ அல்லது நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கும் பொழுது அதை அதிகப்படுத்த வேண்டியோ மேற்கொள்ளப்படும்.

அமெரிக்க, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சமீப காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி, அதன் சொத்து வாங்கும் திட்டத்தை, அமெரிக்க பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில், கைவிட முடிவு செய்துள்ளது.

கடந்த புதனன்று அமெரிக்க மத்திய வங்கி, நிறுவனங்களுக்கு வழங்கி வரும் ஊக்கத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்தது. அதன் காரணமாக வரலாறு காணாத அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 59.98 ஆக சரிந்தது. ரூபாயை தொடர்ந்து சென்செக்ஸும் சரிவை சந்தித்தது.

வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை விற்கத் தொடங்கின. வெள்ளியன்று விற்ற பங்குகளின் மதிப்பு சுமார் ரூ 1,700 கோடியாக இருந்தது, மேலும் கடந்த புதனன்று அவர்கள் விற்ற பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ 2,000 கோடியை தாண்டியது. வெளிநாட்டு நிதி நிறுவங்கள் பங்குகளை விற்கப் போவது என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அவர்கள் பணப்புழக்கப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனையை சமாளிக்க அவர்களுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

பணப்புழக்கத்துடன் இணைந்து, இந்தியாவின் அடிப்படை தூண்களும் ஆட்டம் கண்டு வருகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டது, பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை தொட்டு விட்டது. மேலும் தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. பிந்தயதின் காரணமாக பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்க வாய்ப்பு இல்லை.

இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை ஒரு கடினமான காலகட்டத்தில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வாரத்தில் பெரும்பாலான புளு சிப் பங்குகள் கடந்த ஒரு வருடத்தின் மிகக் குறைந்த அளவை தொட்டு விட்டன. இந்தியப் பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து நாணயச் சந்தைகளிலும் ரத்தக் களரி தொடங்கி விட்டது.

இத்தகைய நிலைமைகளில் பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தாக முடியும். ஏனெனில் இந்த நிலமையில் பங்குச் சந்தையின் கீழ் மட்டம் என்பது எது என நமக்கு தெளிவாகத் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why buying shares now maybe a risky proposition?

It was mayhem across global stock markets this week, especially in India. Over the last 2 years, easy money, prompted by easing liquidity measures in the US, Europe and Japan ensured a lot of money from abroad got pumped into the Indian stocks markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X