
அவ்வாறு இந்திய தடை செய்தால், இந்தியர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்வதில் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும் அவர்கள் அதிகமான வரியைக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.
குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபிய எமிரேட் (UAE), ஹாங் காங், சிங்கப்பூர், சமோயா மற்றும் செய்செல்ஸ் போன்ற நாடுகள், இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைப் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிட மறுக்கின்றன என்று தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வெளியிடாத வெளிநாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜூன் 2011லேயே சட்டங்கள் வந்த பின்பும், இந்தியாவின் வெளிநாடுகளுக்கு உள்ள உறவு பாதிக்கக்கூடாது என்பதற்காக, இந்தியா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தற்போது முழு வீச்சில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.


Click it and Unblock the Notifications