கருப்புப் பணத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்கு இந்தியா- எஃப்எடிஎஃப்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்புப் பணத்திற்கு எதிராகவும் மற்றும் தீவிரவாதிகளின் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இந்தியா மிகத் திறமையாகச் செயல்பட்டு பல்வேறு வகையான தீவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கடந்த புதன் கிழமை அன்று ஃபைனான்சியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் (எஃப்எடிஎஃப்) என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் மேற்சொன்ன குற்றங்களுக்கு எதிரான தனது விதிமுறைகளில் உள்ள குறைகளையும் களைந்து உலகத் தரத்திற்கு இணையான விதிமுறைகளை இந்தியா கொண்டிருக்கிறது என்று எஃப்எடிஎஃப் தெரிவித்திருக்கிறது.

கருப்புப் பணத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்கு இந்தியா- எஃப்எடிஎஃப்

 

எஃப்எடிஎஃப் என்பது அரசாங்கத்தின் ஒரு உள்கட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு, கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகள் உலகளாவிய அளவில் செய்து வரும் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு எதிரான விதிமுறைகளை உருவாக்கி அவற்றை அமல்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளின் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியா பல சிறந்த புதிய விதிமுறைகளைக் கொண்டிருப்பதால், இந்தியாவின் பழைய (எஎம்எல்/சிஎஃப்டி) சாதாரண விதிமுறைகளை நீக்கிவிட எஃப்எடிஎஃப் முடிவெடுத்திருக்கிறது.

இதன் மூலம் கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளின் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு உலக அளவில் ஆதரவு கிடைக்கும் என்று எஃப்எடிஎஃப் நம்புகிறது.

எஃப்எடிஎஃப் தனது புதிய அறிக்கை ஒன்றில் கூறும் போது, இந்தியா அளித்திருக்கும் மியூச்சுவல் இவலூஷன் அறிக்கை (ஜூன் 2010)யைப் பார்ககும் போது, கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளின் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா மிகச் சிறந்த புதிய பல விதிமுறைகளை உருவாக்கியிருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இதற்கு முன்பு, ஒரு சில முக்கிய பரிந்துரைகள் மற்றும் பிசி ரேட்டிங்குகள் காரணமாக இந்தியா பழைய விதிமுறைகளைப் பின்பற்றி வந்தது.

ஜூன் 2010ல் இந்தியா வெளியிட்ட மீச்சுவல் இவலூஷன் அறிக்கையிலிருந்து, தனது எஎம்எல்/சிஎப்டி சிஸ்டத்தை வலுப்படுத்த இந்தியா மிகச் சிறந்த மற்றும் புதிய செயல் திட்டங்களை அமல்படுத்தி வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் தனது திட்டங்களை முறையாக எஃப்எடிஎஃப்க்கு தெரிவித்து வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

தனது செயல் திட்டங்களை அமல்படுத்துவதில் இந்தியா பல படிகள் முன்னேறியிருப்பதாக எஃப்எடிஎஃப் தெரிவித்திருக்கிறது. கடந்த 3 வருடங்களில், இந்தியாவின் செயல் திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளின் பணம் பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பதில் இருந்த தொழில் நுட்பக் கோளாறுகளை மிகப் பெரிய அளவில் நீக்கியிருப்பதாகும்.

மேலும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான தொழில் நுட்பக் கோளாறுகளையும் இந்தியா மிகப் பெரிய அளவில் களைந்திருப்பதாக எஃப்எடிஎஃப் தெரிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India has addressed shortfalls in its black money fight: FATF

In a major boost to measures being taken by India against money laundering and terror financing activities, the Financial Action Task Force (FATF) on Wednesday said the country has substantially addressed the deficiencies in its regulatory framework and has become largely compliant with global standards in this regard.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X