மின் துறையில் அமெரிக்க முதலீட்டை கோரும் மத்திய அரசு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின் துறையில் அமெரிக்க முதலீடுகளை வரவேற்றுள்ள இந்தியா, இரு நாடுகளும், புதிய புனல் மற்றும் அனல் மின்சக்தி நிலையங்களை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறி கொள்வது சம்பந்தமாக, இணைந்து பணியாற்றும் சாத்தியக் கூறுகள் தென்படுவதாக தெரிவித்துள்ளது.

"ஸ்மார்ட் கிரிட் செயல்முறை (smart grid), மைக்ரோ கிரிட் கோபுரத் (micro grids tower) தொழில்நுட்பம் மற்றும் மின்கடத்தி கோபுரங்களில் எரிவாயு காப்பு தொழில்நுட்பம் போன்ற பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய தொழில்நுட்ப பரிமாற்ற சாத்தியக் கூறுகளை பார்க்கிறேன். மேலும், அமெரிக்காவிற்கு மிகப் பெரிய நீர் மின் திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் மற்றும் தேவையான வசதிகள் இருக்கிறது," என மத்திய மின் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.

நீர் மின் திட்டங்கள்

நீர் மின் திட்டங்கள்

மின் துறையில் முதலீடு கோரி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திரு சிந்தியா, "அமெரிக்க மிகப் பெரிய நீர் மின் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்தத் துறையில் அமெரிக்காவிடம் இருந்து மிகப் பெரிய நன்மைகளை இந்தியா பெற முடியும்" என்றார். மேலும் அனல் மின் திட்டங்களுக்கும் அமெரிக்கா ஒத்துழைக்கும் என்றார்.

"நான் ஒரு வழக்கமான அடிப்படையில் ஒருவருக்கொருவருக்கான பரிமாற்றத்தில் ஈடுபட அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

 

மின் உற்பத்தி

மின் உற்பத்தி

இந்திய மின் துறை அமைச்சர் மேலும், "நாங்கள் இப்போது 230 (ஜிகா வாட்கள்) மின் உற்பத்தி திறனை பெற்றுள்ளோம். கடந்த இரண்டு தசாப்தங்களில் மின் துறை சந்தித்த அனைத்து விதமான பிரச்சனைகளையும் தாண்டி 165 ஜிக்ஸ் (ஜிகா வாட்கள்) உற்பத்தித் திறனை உருவாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

கடந்த நிதிஆண்டில் மட்டும், இந்தியா 20 ஜிக்ஸ் (ஜிகா வாட்கள்) உற்பத்தித் திறனை சேர்த்துள்ளது. மின் கடத்தும் பாதையைப் பொறுத்த வரை தெற்கு கிரிட், ஜனவரி 2014 இறுதிக்குள் நாட்டின் பிற மின் பாதையுடன் இணைக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்தார்.

மணி மகுடம்

மணி மகுடம்

"அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மின் கடத்தித் துறையானது மிகப் பெரிய கொள்ளவான 200 ஜிக்ஸ் (ஜிகா வாட்கள்) என்கிற அளவை எட்டி விடும் என நம்புகிறேன். இதில் சுமார் 65 கிகிஸ் (கிகா வாட்கள்) மண்டலத்திற்கு இடையே பறிமாற்றம் செய்ய பயன்படுத்தபடும். இந்த கொள்ளளவு இந்திய மின்சக்தி துறையின் மணி மகுடத்தில் மேலும் ஒரு சிறகாகும் ", என்று அவர் கூறினார்.

மின் விநியோகத்தை பற்றி சிந்தியா குறிப்பிடுகையில் "மின் துறையின் அகில்லெஸ் ஹீல் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே அதை கருத்தில் கொண்டு நாம் கடந்த ஐந்து மாதங்களில் சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

 

கடன் உதவி

கடன் உதவி

"இந்தியாவில் முதன் முதலாக அனைத்து மின் விநியோக நிறுவங்களுக்கும் கடன் மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது அந்த நிறுவங்களின் நிதி நிலைப்பு தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு சான்றாக அமைந்து நேருக்கு நேராக மாநில கடன் முகவர் மற்றும் வணிக வங்கிகளிலிருந்து கடன் பெற உறுதி செய்யும்", என்று அவர் கூறினார்.

"நான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல் கடன் மதிப்பீட்டை வெளியிட்டென், மேலும் அதை ஒவ்வொரு ஆண்டும் தொடருவதற்கு திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

 

 

மறுசீரமைப்பு திட்டம்

மறுசீரமைப்பு திட்டம்

நஷ்டத்தை சந்திக்கும் மின் விநியோக நிறுவங்களை மறுசீரமைப்பு செய்வது பற்றி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி குறுகிய கால நிலுவை பொறுப்புகளில் 50 சதவீதம், மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் மீது சுமர்த்தப்படும்.

மீதி உள்ள 50 சதவீத நிலுவைத் தொகையை தற்காலத் தடுப்பு மற்றும் ஒப்பத்தங்கள் அடிப்படையில் திருத்தி அமைக்கப்படும். அந்த ஒப்பந்தத்தில் இந்த மின் விநியோக நிறுவங்கள் செயலாற்ற வேண்டிய பகுதிகளை பற்றி தெளிவாக குறிப்பிடப்படும். மின் விநியோக நிறுவங்கள் ஒட்டு மொத்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தக (ATMC) இழப்புகள் மற்றும் வருடாந்திர அடிப்படையில் கட்டண திருத்தம் செய்ய வலியுறுத்தப்படுவார்கள்.

 

 

திட்டத்தின் மதிப்பு

திட்டத்தின் மதிப்பு

"கணக்குகளை தாக்கல் செய்வது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகளை ஊக்குவிக்கும் காரணியான இது, 30 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்புடையது" என கூறினார்.

"இந்த சீர்திருத்தங்களுக்கு சுமார் எட்டு அல்லது ஒன்பது மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போது ஐந்து அல்லது ஆறு மாநிலங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றோம். இது தோராயமாக 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையாக இருக்கும்", எனத் தெரிவித்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India seeks investments from US in Power Sector

Inviting US investments into the power sector, India has said both countries can work towards developing hydro and thermal power stations with the possibility of technology transfer.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X