அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வங்கி லைசென்ஸ் கிடைக்காது: ரிசர்வ் வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வங்கி லைசென்ஸ் கிடைக்காது: ரிசர்வ் வங்கி
தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உரிமத்துக்கான ஒப்புதல் அளிக்க முடியாது என்று புது வங்கிக்கான உரிமம் ஒப்புதல் அளிக்கும் செயல்முறை பற்றி ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளது.

 

"இந்த செயல்முறையை நாங்கள் துரிதப்படுத்த முயல்வோம்... அனைத்து விண்ணப்பங்களையும் பார்வையிட்டு பின் ஒரு முடிவுக்கு வருவோம். தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை", என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

26 நிறுவனங்கள் வங்கி உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கிறது என்று இந்த வார தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டாடா சன்ஸ், எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபினான்ஸ், ஆதித்யா பிர்லா நுவோ, டிபார்ட்மண்ட் ஆஃப் போஸ்ட்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், எல் & டி ஃபினான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் போன்ற நிறுவனங்கள் அந்த பட்டியலில் அடங்கும்.

"... அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில், விண்ணப்பதாரர்களை முழுமையை உள் மதிப்பீடு செய்வோம். கூடுதல் தகவல் தேவைபட்டாலும் கேட்டு வாங்கி கொள்ளப்படும்", என்று சுப்பாராவ் கூறியுள்ளார்.

இந்த விண்ணப்பங்களை வெளிக்குழு ஒன்று மதிப்பீடு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"இதற்கு பிறகு ரிசர்வ் வங்கி உரிமங்கள் பற்றிய தன் இறுதி முடிவை எடுக்கும். எத்தனை உரிமங்கள் வழங்கப்படும் என்ற எண்ணிக்கை எதுவும் தற்போது முடிவு செய்யப்படவில்லை", என்றும் சுப்பாராவ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி இந்த புது உரிமங்களை அதுத்த வருடம் மார்ச் மாதம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 26 அரசுத் துறை வங்கிகளும், 22 தனியார் துறை வங்கிகளும், 56 வட்டார கிராமப்புற வங்கிகள் உள்ளன.

1993 ஜனவரியில் 10 வங்கிகளுக்கு சில நெறிமுறைகளின் படி உரிமங்கள் வழங்கப்பட்டது. வங்கிகளின் செயல்பாட்டை பார்த்து கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த நெறிமுறைகள் 2001 ஜனவரியில் திருத்தி எழுதப்பட்டது. பின் மீண்டும் புது உரிமங்களுக்காக விண்ணபங்கள் வரவேற்கப்பட்டது.

எந்த ஒரு விண்ணப்பதாரருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சலுகையும் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த புதன்கிழமை கூறியுள்ளார். மேலும் உரிமங்களின் ஒப்புதலை பற்றியும் இப்போது அரசாங்கம் எதுவும் கூறாது என்று அவர் கூறியுள்ளார்.

"எந்த ஒரு சலுகையும் கிடையாது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றிருக்க வேண்டும். எந்த நிறுவனம் வங்கிக்கான உரிமம் பெறுகிறது என்பதை பற்றியும் அரசாங்கம் எதுவும் இப்போதைக்கு கூறாது. விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் எந்த ஒரு பரிந்துரைப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்." என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Not all eligible applicants may get bank licence: Subbarao

Asserting that it will accelerate the process of issuing new bank licences, Reserve Bank Thursday said it was possible that not all eligible applicants will be granted a licence.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X