இந்தியாவில் 2.5 பில்லியன் டாலரை முதலீடு செய்ய ரெனால்ட்- நிசான் திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் அதிகரித்து வரும் வாகனச் சந்தை பல்வேறு நிறுவங்களின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. இதற்கு ஏற்கனவே கால் பதித்துள்ள நிறுவங்களும் விதி விலக்கல்ல. இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கி வரும் ரெனால்ட் நிசான் நிறுவனம், இந்திய வாகனச் சந்தையில் தன்னுடைய பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக ரெனால்ட் எஸ்.ஏ. மற்றும் நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற இரண்டு நிறுவங்களும் இணைந்து புதிய மாடல்கள் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கார்லோஸ் கோஸன் கூறினார். மேலும் அவர் தம்முடைய நிறுவனம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் $ 2.5 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கார் விற்பனை குறைத்துள்ள போதிலும், ஹோன்டா உட்பட பல்வேறு சர்வதேச நிறுனங்கள் வாகன உற்பத்தி துறையில் ஏராளமாக முதலீடு செய்து வருகின்றன. அத்தகைய நிறுவங்களுடன் போட்டியிடும் விதமாக இந்த பிராங்கோ-ஜப்பனீஸ் கூட்டணி நிறுவனமும், நம் நாட்டில் தொழிற்சாலைகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் விற்பனையை மேம்படுத்தும் பொருட்டு டாலர்களை கொட்டத் தொடங்கி உள்ளது.

ரெனால்ட்- நிசான் கூட்டணியானது ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் ஒரு தொாழில்நுட்ப மையம் மற்றும் மலிவான கார் உற்பத்தி தளம் கட்டுவதற்காக சுமார் $ 2.5 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளது என திரு கோஸன் தெரிவித்தார்.மேலும் "நீங்கள் இந்த 2.5 பில்லியன் முதலீடானது அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளின் இரட்டிப்பாகும் என நம்பலாம் " என அவர் தெரிவித்தார்.

5% சந்தைப் பங்கு

5% சந்தைப் பங்கு

"ரெனால்ட்- நிசான் கூட்டணியானது இந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்து சுமார் 5 சதவீத சந்தைப் பங்கை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் சில ஆண்டுகளில் இது 15 சதவீதம் வரை உயரும். மார்ச் உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் எங்களுடைய நிறுவனத்தின் சந்தைப் பங்கு சுமார் 3 சதவீத அளவிலேயே இருந்தது", என திரு கோஸன் தெரிவித்தார்.

உலகின் 3ஆம் மிக பெரிய கார் சந்தை

உலகின் 3ஆம் மிக பெரிய கார் சந்தை

இந்தியாவில் கார் விற்பனை ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மாதத்தில் தொடர்ந்து எட்டு மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் வாகன உரிமை செலவுகள் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எது எவ்வாறு ஆயினும் கார் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்தப்போவதில்லை. ஏனெனில் வாகன தொழில்துறை நிபுணர்கள் இந்தியா அடுத்து வரும் 2020 ம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிக பெரிய கார் சந்தையாக விளங்கும் என கணித்துள்ளனர்.

2015ல் குறைந்த விலை கார்!!
 

2015ல் குறைந்த விலை கார்!!

ரெனால்ட்-நிசான் நிறுவனம், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை இலக்காகக் கொண்டு, ஒருங்கிணைந்த கார் உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்ட குறைந்த விலை கார்களை 2015 ல் அறிமுகப்படுத்த தயாராகின்றது.

உலகம் முழுவதும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் கூட்டணி மூலம் வாகன உற்பத்தி செய்வதை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தக் கூட்டணியானது கார் தயாரிப்பிற்கான முதலீடுகள் மற்றும் கொள்முதல் நிதி போன்றவற்றை இந்தக் பொருளாதார சூழ்நிலையில் கட்டுப்படுத்தில் நிறுவனத்தை காப்பாற்ற உதவுகிறது.

4 பில்லியன் யூரோகளை சேமிக்க திட்டம்

4 பில்லியன் யூரோகளை சேமிக்க திட்டம்

"இரண்டு நிறுவனங்களின் ஒருங்கினைந்த செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதன் காரணமாக, 2015 ஆம் ஆண்டில் இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 3.5 பில்லியன் யூரோக்களை சேமிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்", என கிரிஸ்டியன் மர்டுர்ஸ், தெரிவித்தார்.

ரெனால்ட் மற்றும் நிசான் முன்பு 2016 ல் 4 பில்லியன் யூரோக்களை கூட்டாக சேமிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது.

 

முதல் குறைந்த விலை கார்

முதல் குறைந்த விலை கார்

"நாங்கள் எங்கள் தயாரிப்புகளை மேலும் சுருக்கிக் கொண்டுள்ளோம். 2015 ஆம் ஆண்டின் எங்களுடைய முதல் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்த போது, நாம் நிச்சயமாக எம்முடைய செலவுகளில் சுமார் 3 பில்லியன் யூரோக்களுக்கும் மேல் சேமிக்க முடியும்", என திரு மர்டுர்ஸ், மூத்த ரெனால்ட்-நிசான் நிர்வாகிகளின் சென்னை வருகையின் பொழுது தெரிவித்தார்.

சென்னையில் டட்சன் கார்

சென்னையில் டட்சன் கார்

நிசான் திங்களன்று அதன் சென்னை ஆலையில் இருந்து புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய டட்சன் பிராண்ட் கார்களை உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் இந்த வகைக் கார்களின் விற்பனை விலை சுமார் 4,00,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Renault-Nissan to invest $2.5 billion in India over five years

Renault SA and Nissan Motor Co Ltd will jointly invest $2.5 billion in India over the next five years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X