இந்திய வறுமை கோட்டின் விகிதம் குறைந்தது!!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில மாதங்களுக்கு முன்பு இந்திய திட்டக் கமிஷன், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களை கணக்கெடுப்பு எடுத்து. இதை திட்டக் கமிஷன் சுரேஷ் டெண்டுல்கர் முறையில் நடத்தப்பட்டது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்து விட்டார். ஆனால் இவர் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களை கணக்கெடுக்கும் முறையில் பல மற்றங்களை செய்து உள்ளார்.

இந்த வருடமும் சுரேஷ் டெண்டுல்கர் முறையிலே, திட்டக் கமிஷனால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

ஏழைகள் மேலும் ஏழை ஆகி கொண்டும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகி கொண்டு இருக்கும் இந்த வேளையில், நமக்கு ஒர் நற்செய்தி. கடந்த 10 வருடங்களில், இந்த வருடம் தான் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஆனால் இன்னும் முழுவதுமாக குறையவில்லை என்பது வருந்தக் கூடிய ஒரு விஷயம்.

1993-94 ஆண்டில்:
 

1993-94 ஆண்டில்:

1993-94 ஆம் ஆண்டின் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் கணக்கெடுப்பில், கிராமப்புறத்தில் 328.8 மில்லியன் மக்களும் (50.1%) , நகர்ப்புறத்தில் 74.5 மில்லியன் மக்களும் (31.8%) இருந்தனர். இதன் முலம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் 45.3 சதவிதமாகும்.

2004-05 ஆண்டில்:

2004-05 ஆண்டில்:

2004-05 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், கிராமப்புறத்தில் 326.3 மில்லியன் மக்களும் (41.8%), நகர்ப்புறத்தில் 80.8 மில்லியன் மக்களும் (25.7%) இருந்தனர். இந்த வருடத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் 45.3 சதவிதத்தில் இருந்து 37.2 சதவிதமாக குறைந்தது.

2011-12 ஆண்டில்

2011-12 ஆண்டில்

கடந்த ஆண்டு கனக்கெடுப்பை இந்த ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகிழ்ச்சி கொள்ளும் அளவில் வறுமை மக்களின் விகிதம் குறைந்து உள்ளது. 37.2 சதவித்தில் இருந்து 21.9 சதவிதமாக குறைந்த உள்ளது. இதனால் கிராமப்புறத்தில் 216.5 மில்லியன் மக்களும் (25.7%), நகர்ப்புறத்தில் 52.8 மில்லியன் மக்களும் (13.7%) இருக்கின்றனர்.

இந்திய பொருளாதாரம்
 

இந்திய பொருளாதாரம்

வரும் கலத்தில் இந்த விகிதம் இந்திய பொருளாதாரதை பொறுத்தே அமையும் என அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது இருக்கும் பொருளாதாரம் தொடர்ந்து நிடித்தால் இந்த விகிதம் சற்று கவலைகிடமாகவும் மாறலாம்.

இந்திய திட்டக் கமிஷன்

இந்திய திட்டக் கமிஷன்

இந்திய திட்டக் கமிஷனின் தலைவர், நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள். இவர் தலைமையில் தான் இந்த குழு செயல்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian poverty ratio

The latest numbers on poverty levels are dramatic; they show that the number of people below the poverty line (as defined by the late economist Suresh Tendulkar ) has shrunk from 37 per cent of the population to 22 per cent, in the seven years to 2011-12.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X