இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை குறைப்பதில் சர்வதேச நிறுனங்கள் பிஸியோ பிஸி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசாங்க அதிகாரிகள் இந்தியாவின் பொருளாதாரம் கண்டிப்பாக மீட்சியடையும் என நம்பிக்கை அளிக்கும் பொழுது, உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பிற புகழ்பெற்ற உலக நிறுவனங்கள் சில இந்தியாவின் வளர்ச்சி விகிதங்களை குறைத்து மதிப்பிடுவதில் மிகவும் பிஸியாக உள்ளன.

அவர்களுடைய மதிப்பீடுகளை தயவு செய்து படித்துப் பாருங்கள். அவர்களுடைய மதிப்பீட்டின் படி இந்திய வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் மிகச் குறைந்த அளவை தொட்டு விடும் தூரத்தில் இருக்கின்றது. மறைமுகமாக சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றன. அவர்களுடைய கணிப்புகள் இதோ உங்களுக்காக

சர்வதேச நாணய நிதியம்
 

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) இந்த மாதத் தொடக்கத்தில் 2013-14 ம் ஆண்டிற்கான இந்திய வளர்ச்சி விகிதத்தை 5.8 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக குறைத்துள்ளது. முன்னதாக சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் மாதத்தில், வரும் நிதியாண்டிற்கான இந்திய வளர்ச்சி விகிதத்தை சுமார் 5.8 சதவீதமாக கணித்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் அனுமானத்தின் படி வளர்ந்து வரும் சந்தைகள் ஒரு நீண்ட பொருளாதார சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. இந்த அபாயமானது அந்த நாடுகளின் கடன் அளவில் ஏற்பட்டுள்ள சரிவு, உள்நாட்டு மற்றும் வெளித்தேவைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றாவற்றால் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கி

ஆசிய மேம்பாட்டு வங்கி

ஆசிய மேம்பாட்டு வங்கி இந்த வாரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக குறைத்துள்ளது. "இந்தியாவில் வணிக இடர்ப்பாடுகளை எளிதாக்க தேவையான சீர்திருத்தங்களை மெதுவாக முன்னெடுப்பதன் காரணமாக இந்திய வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது" என ஆசிய மேம்பாட்டு வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒஇசிடி (OECD)

ஒஇசிடி (OECD)

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பற்றிய OECDயின் கணிப்பு மிகுந்த அவநம்பிக்கை அளிப்பதாக உள்ளது. "ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவின் வளர்ச்சி 2013 ம் ஆண்டில் 5.3 சதவீத அளவிற்கு இருபதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது", என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. OECD, நவம்பர் மாதத்தில் இந்திய வளர்ச்சி விகிதம் சுமார் 5.9 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.

உலக வங்கி
 

உலக வங்கி

உலக வங்கி நடப்பு நிதி ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை தனது முந்தைய நிலையான 6.1 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. மேலும் இது, உலக வளர்ச்சி விகிதத்தை சுமார் 2.2 சதவீத அளவிற்கு குறைத்து மதிப்பிட்டுள்ளது.

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டான்லி

நடப்பு நிதி ஆண்டில் எதிபார்க்கப்பட்டதை விட குறைந்த நிதி விரிவாக்கம் (சுமார் 5 சதவீதம்) மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவற்றின் காரணமாக வரும் நிதியாண்டிற்கான (FY14) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 6 சதவீத அளவிலேயே இருக்கும் என மார்கன் ஸ்டான்லி மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்க முதலீட்டு வங்கி

அமெரிக்க முதலீட்டு வங்கி

"இன்னும் தொடர்ந்து வரும் சவாலான உள்நாட்டு மற்றும் வெளி உலக சூழல் காரணமாக நாங்கள் வரும் நிதியாண்டிற்கான (FY14) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை சுமார் 6.2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளோம்", என அமெரிக்க முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணரான சேத்தன் அஹ்ய, ஒரு ஆய்வுக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How global institutions are busy lowering India's growth rates?

While government officials are sounding buoyant on India's economic recovery, some of the reputed global institutions including the IMF, World Bank, Asian Development Bank and others are busy cutting India's growth rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X