எரிவாயு விலை கொள்கையை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை: வீரப்ப மொய்லி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எரிவாயு விலை கொள்கையை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை: வீரப்ப மொய்லி
புதுச்சேரி: மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான எம் வீரப்ப மொய்லி, புதிய எரிவாயு விலை கொள்கையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று கூறினார்.

"பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எரிவாயு விலை நிர்ணய கொள்கை முடிவை எடுத்து. அதை மறுபரிசீலனை செய்யயும் திட்டம் அரசிடம் இல்லை. மேலும், அதை மாற்றும் யோசனை இல்லை, ஏனெனில் அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்", என நிருபர்களுடனான சந்திப்பின் போது திரு மொய்லி தெரிவித்தார்.

புதிய எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பற்றிய அரசின் முடிவானது பல்வேறு மன்றங்கள் மற்றும் பொது இடங்களில் ஒரு பரந்த விவாதம் நடத்தி அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விலை நிர்ணயக் கொள்கையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என திரு மொய்லி மேலும் வலியுறுத்தினார்.

எரிவாயு விலை அதிகரிக்கும் அரசின் கொள்கை முடிவானது பலரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் அரசின் இந்தக் கொள்கை முடிவை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மொய்லி ஓஎன்ஜிசி நிறுவனம் முன்னுரிமை அடிப்படையில் காரைக்காலில் உள்ள புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் கன மீட்டர் எரிவாயு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி 32 மெகாவாட்டில் இருந்து 800 மெகாவாட்டாக அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

ஓஎன்ஜிசி நிறுவனமும் முன்னுரிமை அடிப்படையில் இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் எரிவாயு போக்குவரத்தை அது உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

இங்கு வருவதற்கு முன்னர் திரு மொய்லி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அப்பொழுது இந்தப் பிரச்சனை பற்றி புதுச்சேரியின் லெப்டினென்ட் கவர்னர் விரேந்ர கடாரியாவுடன் விவாதித்ததாகவும் கூறினார்.

பிரதமர் அலுவலக அமைச்சர் திரு வி நாராயணசாமி இந்த மின் உற்பத்தியை அதிகரிப்பது சம்பந்தமாக முனைப்புடன் செயல்பட்டதாக திரு மொய்லி தெரிவித்தார்.

திரு மொய்லி, புதுச் சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பது சம்பந்தமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த பிற வேலைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர், ஓஎன்ஜிசி காரைக்காலில் ஒரு சிறப்பு மருத்துவமனைஅமைப்பது சம்பந்தமாக மாநில அரசுடன் இணைந்து பணியாற்றும் எனத் தெரிவித்தார்.

கெய்லின் (GAIL) குழாய் பதிக்கும் திட்டம் விவசாயத்தை ஒருக்காலும் பாதிக்காது. அது தமிழ்நாடு மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உதவியே புரியும் என மொய்லி மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே நாடு முழுவதும் 16,000 கி.மீ. தொலைவிற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அது விவசாயத்தை பாதிக்கவில்லை என்பதை விவசாயிகளும் உணர்வார்கள் என தமிழ்நாடு அரசின் வெளிப்படையான ஆட்சேபனைகளை சுட்டிக் காட்டி திரு மொய்லி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

M Veerappa Moily rules out reconsidering gas pricing policy

Veerappa Moily said there was no proposal before the government to reconsider the new gas pricing policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X