எல்ஐசி நிதி திரட்டும் முயற்சிகளில் அரசை காப்பாற்றவில்லை: நிதி அமைச்சகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி நிதி திரட்டும் முயற்சிகளில் அரசை காப்பாற்றவில்லை: நிதி அமைச்சகம்
பொதுத்துறை பங்குகளை சந்தையில் விற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எல்ஐசி நிறுவனம் தான் கை கொடுத்து காப்பாற்றி வருகிறது என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படை ஆதாரமற்றது எனச் குற்றம் சாடியுள்ளது நிதித்துறை அமைச்சகம், இம்முயற்சிகளுக்கு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கடந்த திங்கள்கிழமை கூறியுள்ளது.

 

2012-13 ஆம் ஆண்டில் ஆயில் இந்தியா லிமிடெட், என்எம்டிசி லிமிடெட் (NMDC Ltd), என்டிபீசி லிமிடெட் (NTPC Ltd) மற்றும் செயில் நிறுவனம் உட்பட 7 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்றதின் மூலமாக 23,830 கோடி ரூபாய் திரட்டபட்டதாகவும், அந்த தொகையில் 39 விழுக்காடு முதலீடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாக தெரிவித்த நிதி அமைச்சகம், எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து 25 விழுக்காடு தொகையே வந்தாகவும் கூறியுள்ளது. மேலும் 10 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளது.

நான்கு பெரும்பொதுத்துறை நிறுவனங்களான ஆயில் இந்தியா லிமிடெட், என்எம்டிசி லிமிடெட், என்டிபீசி லிமிடெட் மற்றும் செயில் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை விற்றதின் மூலமாக 22,087 கோடி கிடைத்தாகவும், அந்த தொகையில் 42 விழுக்காடு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்ததாகவும், 22 விழுக்காடு நிதி எல்ஐசி நிறுவனம் உள்ளீட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைத்ததாகவும், மற்றும் பொதுத்துறை வங்கிகள் 9 விழுக்காட்டிற்கும் குறைவான பங்கை வாங்கியுள்ளதாகவும், நிதி அமைச்சகம் கூறியுள்ளது

"மத்திய அரசு, பங்கின் விலையை நிர்ணயம் செய்யும் போது, அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், சந்தை நிலவரம், முதலீட்டாளர் ஆர்வம், பல்துறை முதலீட்டாளர் பங்கேற்பு உள்ளீட்ட பல்வேறு காரிய காரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, நியாயமான ஏற்புடைய அளவில் தான் விலை முடிவு செய்யப்படுகின்றன."

"அரசாங்க நிறுவனங்களின் தன்னியல்பான வலிமையான செயல்பாடுகளின் காரணமாக, நீண்டகால முதலீட்டளர்கள் (பன்னாட்டு முதலீட்டளர்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள்) , இம்மாதிரியான அரசாங்கத்தின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பதாகவும்" நிதி அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC not rescuing government's disinvestment programme: FinMin

Amidst the media reports that government's stake sale in PSUs via Offer-for-Sale (OFS) are mainly salvaged by Life Insurance Corporation of India (LIC).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X