லெக்சிட்டி நிறுவனத்தை வாங்கியது யாஹூ

இணையவழி வர்த்தக தொழில்களுக்கும், சேவைகளுக்கும் உதவும் மென்பொருள்களை தயாரிப்பதில் நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த லெக்சிட்டியை, யாஹூ தற்போது தன்வசப்படுதியுள்ளது .
யாஹூ நிறுவனத்தின் முன்னால் ஊழியரான அமித் குமார் என்பவரால் துவங்கப்பட்ட லெக்சிட்டி நிறுவனம், மின் வணிக தொழில்களுக்கான பல்வேறு செயலிகளை தயாரித்துள்ளது. 114 நாடுகளில் பரவிக்கிடக்கும் இந்த நிறுவனம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கைகயாளர்களை கொண்டு இயங்கிவருகிறது.
"இந்த தருணத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஹூ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கும் வேளையில், எங்களுடைய நோக்கங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்" என வலைப்பதிவில் அமித் குமார் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு விலைக்கு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதை யாஹூ நிறுவனம் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications