மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதன்முறையாக தனியார் துறையின் உற்பத்தி சுருங்கி வருவதின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி செல்கிறது. உயரும் வட்டி விகிதங்கள், குறையும் வளர்ச்சி விகிதங்கள், மோசமான முதலீட்டு சூழல், வரலாறு காணாத ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளின் விளைவாக, பொருளாதாரம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டிய முன் எப்போதும் இல்லாத அவசர சூழல் ஏற்பட்டுள்ளது. 16 நாட்களில் 44 மசோதாக்கள் நிறைவேறத் தயாராக இருந்தாலும், பாராளுமன்றத்தில் பொருளாதாரம் தொடர்பான மசோதாக்களை விரைந்து கொண்டு வரவேண்டும்.

 

44 நாட்கள் நடக்கும் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு வீணாகிவிட்டது. மழைக்கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்படாவிட்டால், இன்னும் 43 நாட்கள் மட்டுமே செயல்பட முடியும்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவும். அதேபோல் நிலம் கையகப்படுத்துதல் மசோதா போன்றவை தொழில்துறையை உற்சாகப்படுத்தும் மற்றும் காப்பீட்டு திருத்த மசோதா அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்த வழிவகை செய்யும்.

காப்பீட்டு துறையில் 49% அன்னிய முதலீடு

காப்பீட்டு துறையில் 49% அன்னிய முதலீடு

ஏப்ரல் மாத தொடக்கத்தில், நிதி அமைச்சர் ப சிதம்பரம் காப்பீட்டு துறையில் 49 சதவிகிதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் காப்பீடு திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். எதன் அடிப்படையில் சிதம்பரம் அவ்வாறு கூறினார் எனத் தெரியவில்லை?. பாரதீய ஜனதா கட்சி குறிப்பிட்ட மசோதாக்களை தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நில சீர்திருத்த மசோதா
 

நில சீர்திருத்த மசோதா

நில சீர்திருத்த மசோதா மீது, அரசு மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதல் நாள் போல் கொந்தளிப்பு இல்லாமல் பாராளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும். நில சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நிலம் கையகப்படுத்தல் எளிதாக மாற்றப்படும். விவசாயிகளுக்கும் நியாயமான நில விலை விகிதங்கள் கிடைக்கும்.

மிக அவசரமாக தேவைப்படும் மசோதா

மிக அவசரமாக தேவைப்படும் மசோதா

மிக அவசரமாக தேவைப்படும் வரி சீர்திருத்தங்களுள் ஒன்றாக சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்த மசோதா விளங்குகிறது. சிதம்பரம் மாநில முதல் அமைச்சர்களுடன் பேசி வருவாய் பகிர்வில் உடன்பாடு ஏற்படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இது சாத்தியமாவதற்கு பாராளுமன்றம் செயல்பட வேண்டும்.

நான் ரெடி, பாராளுமன்றம் ரெடியா??

நான் ரெடி, பாராளுமன்றம் ரெடியா??

"தேவையான சட்ட திருத்த மசோதாக்கள் தயாராக இருக்கும். மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியில் பாராளுமன்றத்தில் மசோதாக்களை நான் அறிமுகப்படுத்துவேன், பின்னர் அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவது பாராளுமன்றத்தின் கைகளில் தான் உள்ளது" என சிதம்பரம் கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேற்கண்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் முதலீட்டிற்கான உகந்த சூழல் ஏற்படும் .

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: monsoon parliament economy
English summary

Why the monsoon session of parliament must pass economy related bills?

India's economic data is getting worse, with the latest being private sector output contracting for the first time since 2009.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X