மொபைல் ரொம்ப நாளா ஆஃப்ல இருக்கா?? அப்ப உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உங்கள் மொபைல் நீண்ட காலமாக ஆஃப் செய்யப்பட்டுள்ளதா?? ஆப்படியானால் உங்கள் வங்கி கணக்கை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.

 

இந்த திருட்டு பசங்க தொல்ல தங்க முடியலப்பா!!. இப்பொழுது டுப்ளிகேட் சிம் கார்டின் முலம், வங்கிளிடம் இருந்து ஒன் டைம் பாஸ்வேர்டுகளை பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களின் முலம் பெற்று வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பல குற்றங்கள் நடைபெறுவதாக வங்கிளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

சமிபத்தில், இதே முறையில் ஒருவர் வங்கி கணக்குகளை பார்க்கும் போது 2.5 இலட்ச ரூபாய் பரிபோனது தெரியவந்துள்ளது. சமந்தப்பட்ட வங்கியிடம் விசாரிக்கும் போது, பரிமாற்றங்கான ஒன் டைம் பாஸ்வேர்டு எண்ணை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பபட்டதாக கூறினர்.

மேலும் அவர்கள் செய்த அனைத்து பரிமாற்றங்களுமே டுப்ளிகேட் சிம் கார்டு முலமே செய்யப்பட்டது என மேற்படி விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிம் கார்டுகள் அனைத்தும் சட்டவிரோதமாக பெறப்பட்டவையாகும்.

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

இந்த மொபைல் மற்றும் இன்டர்நெட் பாங்கிங் யுகத்தில், சைபர் தளத்தில் புதிதாகவும் மற்றும் தந்திரமான முறையில் பல மோசடிகள் நடைபெறுவதாக ஆர்பிஐ மற்றும் வங்கி புகார் தரவுகளில் தெரிகிறது.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

"ஒன் டைம் பாஸ்வேர்டுகளின் மூலம் வங்கி கணக்குகளை முறையற்ற வகையில் சில மோசடி கும்பல் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற மோசடி நிகழ்வுகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறோம்" என்று ஆந்திர பிரதேசதின், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி புகார் துறை, தலைமை பொது மேலாளர், கிருஷ்ணா மோகன் கூறினார்.

வங்கி மற்றும் TRAI
 

வங்கி மற்றும் TRAI

மேலும் அவர் "தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர் (KYC) நெறிகள் மீறி இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும். இது வங்கிகள் மற்றும் TRAI உடன் இனைந்து செயல்படுவதன் முலம் செயல்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

தொலை தொடர்பு ஆபரேட்டர்கள்

தொலை தொடர்பு ஆபரேட்டர்கள்

மேலும் சிம் கார்டு மற்றும் டுப்ளிகேட் சிம்களை வழங்கும் முன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் கேஒய்சி (KYC) விதிகளையும் பின்பற்றுவதாக தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

யூனிநார்

யூனிநார்

"நாங்கள் முழுமையாக தொலை தொடர்பு வழங்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்துகிறோம். எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் விதிமுறைகளை மீறி சிம் கார்டுகளை வழங்குவதில்லை." என்று ஆந்திர பிரதேச வட்டத்தின், யூனிநார் வர்த்தக தலைவர் சதீஷ் கண்ணன் தெரிவித்தார்.

பற்று / கடன் அட்டைகளின் குளோனிங்

பற்று / கடன் அட்டைகளின் குளோனிங்

மொபைல் மற்றும் இன்டர்நெட் பாங்கிங் மட்டும் அல்லாமல் பற்று / கடன் அட்டைகளை குளோனிங் செய்வதிலும் இந்த மோசடி கும்பல் இரங்கிவிட்டனர். இந்த குளோனிங் முறையில் பற்று / கடன் அட்டைகளின் பின் எண்களை (PIN) தெரிந்து கொள்ள பல வழிகள் இருக்கிறதாம்.

ஆன்லைன் வைரஸ்

ஆன்லைன் வைரஸ்

"பற்று / கடன் அட்டைகளின் விவரங்களை ஆன்லைன் முலமாகவும் பெற முடியும். நமது கணினியில் கண்டறியப்படாத சிறிய வைரஸ் இருக்கலாம், அதை கொண்டு இத்தகைய மோசடி கும்பல் தகவல்களை பெறுகின்றனர்." என்று வங்கிகள் தெரிவிக்கின்றது.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு

இரண்டு அடுக்கு பாதுகாப்பு

வரும் நவம்பர் 1 முதல் ஆர்பிஐயின் நடவடிக்கையின் முலம் அனைத்து அட்டை சார்ந்த பரிமாற்றங்கள், இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Doulbe Pin or Password) அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mobile and internet banking may riskier

mobile and internet banking may riskier
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X