ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு, சிதம்பரம் கூறும் காரணங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

"வெறும் புற காரணிகள் மட்டும் இல்லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். நிதி பற்றாக்குறையை அதிகரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போது, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத்த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன " என்று அவர் கூறினார். இந்த கால கட்டத்தின்போது அரசாங்கம் மேற்குலக பொருளாதாரங்களின் சரிவினால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்க வேண்டும் என ஊக்க நடவடிக்கைகள் அறிவித்தது.

நிதிப் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை

நிதிப் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை

2008ஆம் ஆண்டின் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட மிக கடுமையான விளைவுகளை, சில முக்கிய நடவடிக்கைகளின் முலம் நாம் தவிர்த்தோம். ஆனால் நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை போன்ற விஷியங்களில் நம்மை பாதித்தன" என சிதம்பரம் கூறினார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதன் விளைவாக தற்போது நிதிப் பற்றாக்குறையை சீரமைக்கும் பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

நாணய மாற்று விகித பிரச்சனை

நாணய மாற்று விகித பிரச்சனை

"ஆகஸ்ட் 2012 மற்றும் மே 2013க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நாணயப் பரிமாற்ற விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் நிலையாக இருந்தது. ஆனால் மே 22 முதல் ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது" என்று நிதி அமைச்சர் கூறினார். "வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் அனைத்தும் இந்த நாணய மாற்று விகித பிரச்சனையை தற்போது எதிர்கொண்டுள்ளன." என்று கூறிய அவர்,

பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும்

பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும்

எதிர்காலத்தில் ரூபாய் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்று கணிக்க மறுத்து, "நாம் பொறுமையாக இருக்க வேண்டும், மேலும் உறுதியாகவும், தெளிவாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும். நம்முடைய பொருளாதார அடிப்படைகளை பலப்படுத்த வேண்டும்" என்றும் கூறினார்.

நம்பிக்கையுடன் சிதம்பரம்

நம்பிக்கையுடன் சிதம்பரம்

"ரூபாய் அதன் உண்மையான மதிப்பை அடையும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்" என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

இவரை உண்மையிலே நம்பலாமா பாஸ்???

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Domestic factors also responsible for Re slide: Chidambaram

Finance Minister P Chidambaram says decisions taken at home to counter impact of 2008 economic meltdown were among the reasons for depreciation of the Indian currency.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X