ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!! சூப்பரான "முதலீட்டுத் திட்டங்கள்"..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மூலதன பாதுகாப்பு, முதலீட்டு மதிப்பேற்றம், வரிச்சலுகை ஆகியவை உட்பட, ஒரே முதலீட்டின் மூலம் இரட்டை ஆதாயத்தை நாடும் முதலீட்டாளர்களுக்காக, இவ்வாறான பயன்களை ஒன்றாக வழங்கும் 3 முதலீட்டுத் திட்டங்கள் வர்த்தக சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு;

 

1.எஸ்.ஆர்.ஈ.ஐ இன்ஃப்ராஸ்ரக்சர் ஃபைனாஸ் லிமிட்டெட் - என்.சி.டி (NCD) ஐ.பி.ஓ (IPO)

 

கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இத்திட்டம், செப்டம்பர் 17, 2013 வரை சப்ஸ்கிரிப்ஷன் செய்வதற்காக, பொதுமக்களுக்கும், நிறுவன முதலீட்டாளர்களுக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3 வருட காலத்திற்கு 11.50% மும், 5 வருடகாலத்திற்கு 11.75%மும் கவர்ச்சியான வட்டி விகிதத்துடன் கூடிய பாதுகாப்பாக மீட்டுக்கொள்ளதக்க என்.சி.டிகளை (நான்-கன்வெர்ட்டபல் டிபன்சர்), வங்கி நிலையான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுகையில் உயரிய லாப விகிதத்தை வழங்குகின்றன. மேலும்ஒரு திட்டமாக, 6 வருடங்கள் 3 மாத காலத்தில், முதலீட்டுத்தொகையை இரட்டிப்டைய செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நிறுவனம், ரூ.200 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை, முதலில் வருவோருக்கு - முதலில் வழங்குதல் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச சப்ஸ்கிரிப்சன் அளவு 10 யூனிட்டுகள் என்ற அளவில், யூனிட்டுகளை ஒதுக்கீடு செய்யும். வங்கி நிலையான வைப்பு நிதி வட்டி வருமானத்தின் மீது டிடிஎஸ் பிடிக்கப்படுவது போல், என்சிடிகள், டீமேட் வடிவத்தில் பராமரிக்கப்படும் போது, முதலீட்டு வருமானத் தொகையின் மீது டிடிஎஸ் பிடிக்கப்பட மாட்டாது.

கேர் நிறுவனத்தின் சிஏஆர்ஈ ஏஏ - ரேட்டிங் மற்றும் ப்ரிக்ஒர்க் இந்தியாவின் பி.ப்யூ.ஆர் ஏஏ-ரேட்டிங் மூலம், நிதிப் பத்திர பாதுகாப்பு ஆதரவளிக்கப்படுகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!! சூப்பரான

2. எச்டிஎஃப்சி மூலதன பாதுகாப்பு சார்ந்த நிதி - தொடர் -1

எச்டிஎஃப்சியின், 3 வருட கால குளோஸ் என்டெட் ( மூடிய முனை) மியூச்சுவல் ஃபண்ட் என்பது, முதலீட்டு இடர்பாடுகளை விரும்பாத, மற்றும் பங்கு வெளிப்பாட்டில் சிறிது ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய நிதி திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில், முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் 83-88% பணச்சந்தையிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுவதால், முதலீட்டாளர்களின் மூலதனத்திற்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. அதேவேளை, முதலீட்டாளர்களுக்கு மூலதன மதிப்பேற்ற வழிவகை செய்யும் அடிப்படையில், கிட்டத்தட்ட 17% முதலீட்டுத் தொகை, ஹை ரிஸ்க் பங்குகளில் அல்லது ஈக்யூட்டி டெரிவேட்டிவ் உள்ளடக்கிய பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

எச்டிஎஃப்சி நிதியின் என்.எஃப்.ஓ வில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், குறைந்தபட்சத் தொகையாக ரூ.5000 மும் அதற்கு மேல் பத்தின் மடங்காகவும் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டம் நேரடியான மற்றும் முறைப்படியான தேர்வைக் கொண்டிருபதால், என்ட்ரி மற்றும் எக்ஸ்சிட் லோடும் கிடையாது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!! சூப்பரான

3. ஐ.டி.பி.ஐ வரி சேமிப்பு நிதி - என்.எஃப்.ஓ

ஐ.டி.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திறந்த முனை (ஓப்பன் என்டெட்) திட்டம் ஒரு பங்கிணைந்த (ஈக்யூட்டி-லிங்க்ட்) சேமிப்புத் திட்டமாகும் (ஈ.எல்.எஸ்.எஸ்). இது செப்டம்பர் 3, 2013 வரை சப்ஸ்கிரிப்ஷன் செய்வதற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டிலிருந்து, மூலதன மதிப்பேற்றம் மற்றும் வரிச் சலுகை ஆகிய இரண்டு பயன்களையும் விரும்பும் முதலீட்டாளகளுக்கு இது பொருத்தமான திட்டமாகும். வருமான வரி சட்டப் பிரிவு 80சி யின் கீழ், முதலீட்டுத் தொகையில் ரூ.1 லட்சம் வரை வரிச் சலுகை வழங்கப்படும். மேலும் ஈ.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் மூலம் ஈட்டக்கூடிய பங்கு லாபத்திற்கும் வரி விடுப்பு உள்ளது.

இந்தத் திட்டதின் கீழ், முதலீடு செய்யப்படும் தொகையில் 80% பங்கு மற்றும் பங்குசார்ந்த பத்திரங்களின் முதலீடு செய்யப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு மூலதன மதிப்பேற்றத்தை இது வழங்குகிறது. இந்த நிதியை திரும்பப்பெறும் பட்சத்தில், நீண்ட கால முதலீட்டு லாப வரி கிடையாது.

சப்ஸ்கிரிபஷனின் போது, ஃபேஸ் வாலியூ ரூ.10 என்ற அடிப்படையில் சமமாக இந்த நிதி யூனிட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்குப் பின்னர் என்.ஏ.வி (நிகர சொத்து மதிப்பு) தொடர்பான விலைகளில் இது வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 investment options for the week

For investors seeking a couple of benefits, including capital protection, capital appreciation, tax benefits from a single investment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X