இந்தியாவின் முதல் காலாண்டில் ஜிடிபி சரிவு!!: மழையின் காரணமாக விவசாய துறை மட்டும் தப்பித்தது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 30 2013 ல் முடிவுக்கு வந்த முதலாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 4.4 சதவிதத்தை எட்டி பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.7 சதவிதத்தை தொடும் என்று எதிர்பார்த்த பொருளாதார ஆய்வாளர்களுக்கு இந்த முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து 5 சதவிதத்திற்கு கீழாகவே இருந்து வருகிறது. மார்ச் 31 2013 ஆம் தேதி முடிவுக்கு முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.8 விழுக்காடாக இருந்தது.

இவ்வாறு குறைந்த நிலையில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பங்கு சந்தையை உற்சாகப்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. வெள்ளியன்று உயர்ந்த ரூபாய் மதிப்பு, திங்களன்று மீண்டும் குறைந்தது.

விவசாய துறை

விவசாய துறை

நல்ல மழை மற்றும் அதிக உற்பத்தியின் காரணமாக, விவசாய துறை மட்டுமே இந்த காலாண்டில் 2.7 சதவீதம் வளர்ந்துள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை

உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை

உற்பத்தித்துறையோ 1.2 விழுக்காடு எதிர்மறை (அதாவது குறைவு) வளர்ச்சியை கண்டது. சேவைத் துறை 6.6 விழுக்காடு வளர்ந்துள்ளது. முந்தைய காலாண்டுகளில் 7 சதவித வளர்ச்சியைக் கண்ட கட்டுமானத்துறை 2.8 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை இந்த காலாண்டில் எட்டியுள்ளது.

உலகப்பொருளாதார நெருக்கடி

உலகப்பொருளாதார நெருக்கடி

கடந்த சில ஆண்டுகளில் வலுவான நிலையில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கடந்த சில காலாண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. சில காலண்டுகளுக்கு முன்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த நிலையை அடைந்தது. 2௦௦8 ஆண்டில் உலகப்பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட இந்தியா நன்றாக வளர்ந்தது.

மோசமான நிலையை ஏட்டும்

மோசமான நிலையை ஏட்டும்

குறைந்த வரும் முதலீடு, அதிகரித்து வரும் வட்டி விகிதங்களின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்த நிலையிலே இருக்கும் என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர். ரூபாயின் வீழ்ச்சி, குறைவாக அளவில் வெளிவந்துள்ள சேவைத்துறை தரவுகளைக் கணக்கில் கொண்டால் அடுத்த காலாண்டில் இன்னும் மோசமான அளவில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

நடனமாடும் ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கப் பெருக்கத்தை கணக்கில் கொண்டு, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவி ஏற்க உள்ள ரகுராம் ராஜன் வட்டி விகிதங்களை குறைக்க சாத்தியமில்லை.

6 முதல் 9 மாதங்களுக்கு இதே நிலைமைதான்

6 முதல் 9 மாதங்களுக்கு இதே நிலைமைதான்

பெரும்பாலான ஆய்வாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு தர பகுப்பாய்வு நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை குறைத்தே மதிப்பிட்டுள்ளனர். பணப்புழக்கத்தை கட்டுபடுத்தும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் தொடர சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்திய பொருளாதாரம் அடுத்த 6-9 மாதங்களுக்கு மோசமான அளவில்தான் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்" என பிரெஞ்சு வங்கி பிஎன்பி பாரிபாஸ் இந்த வார தொடக்கத்தில் கூறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Q1 GDP at 4.4 per cent; industrial growth drops sharply

India's Q1 GDP for the 1st quarter ending June 30, 2013 has come in at a disappointing 4.4 per cent, largely at the lower end of analysts estimate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X