
சுமார் ஒரு வருட காலமாக நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வந்துள்ள 50 வயதாகும் திரு ராஜன், திரு துவ்வுரி சுப்பாராவ் அவர்களுக்கு பதிலாக செப்டம்பர் 4ஆம் தேதியன்று கவர்னராக பொறுப்பு ஏற்றார்.
தொழில்துறை மந்தநிலை, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம் மற்றும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து காணப்படும் சிஏடி போன்ற சவால்களுடன் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் மத்திய வங்கியின் 23-ஆவது தலைவராக திரு ராஜனின் நியனம் நிகழ்ந்துள்ளது.
மீடியா தகவல்களின் படி, தன் வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர் போன திரு ராஜன், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதிப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டதாகவும் தெரிகிறது. 2005 ஆம் ஆண்டில், ராஜன் அவர்கள் நிதித் துறையைச் சாடி ஆற்றிய உரையில் நிதி சார்ந்த பேரழிவு ஒன்று கூடிய விரைவில் வரக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம் !!


Click it and Unblock the Notifications