லூமியா ஸ்மார்ட்போன் வெற்றியால் நோக்கியா நிறுவனத்தை கைப்பற்றும் மைக்ரோசாப்ட்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தின் சில பகுதிகளை வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததே. இப்பொழுது இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம். தற்போது இரு நிறுவனங்களைச் சேர்ந்த உயர்மட்ட இயக்குனர் குழு சில முக்கிய வர்த்தக பரிமாற்றத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

நோக்கியாவின் சாதனங்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை வாங்குவதற்கும், நோக்கியாவின் காப்புரிமைகளுக்கு உரிமம் பெறுவதற்கும், நோக்கியாவின் மேப்பிங் சேவைகளுக்கு உரிமம் பெற்று அவற்றை உபயோகித்துக் கொள்வதற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இத்திட்டதை வழிவகை செய்யக்கூடிய ட்ரன்ஸாக்ஷன் ஒப்பந்தத்தையும் செயல்படுத்த தீர்மானித்துள்ளதாக நோக்கியா இக்குழு அறிவித்துள்ளன.

5.44 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தம்

5.44 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தம்

ஒப்பந்த விதிகளின் படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவின் சாதனங்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை வாங்குவதற்கு சுமார் 3.79 பில்லியன் யூரோக்களும், நோக்கியாவின் காப்புரிமைகளுக்கு உரிமம் பெற்றுக் கொள்வதற்கு சுமார் 1.65 பில்லியன் யூரோக்களும் ஆக இந்த ட்ரான்ஸாக்ஷனுக்கான மொத்த விலையாக சுமார் 5.44 பில்லியன் யூரோக்களை பணமாக செலுத்த உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி திட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி திட்டம்

இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் கடல் கடந்த பண மூலதனங்களிலிருந்து இந்த ட்ரான்ஸாக்ஷனுக்கு தேவையான நிதியை திரட்ட உள்ளது. இந்த ட்ரான்ஸாக்ஷன், நோக்கியாவின் பங்குதாரர்களின் ஒப்புதல், ரெகுலேட்டரி ஒப்புதல்கள் மற்றும் மூடுவிழா தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை நிறைவு செய்து, 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லூமியா ஸ்மார்ட்போன்களின் சாதனையின் விளைவு
 

லூமியா ஸ்மார்ட்போன்களின் சாதனையின் விளைவு

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கியாவுடனான கூட்டு வர்த்தகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நோக்கியாவின் லூமியா ஸ்மார்ட்போன்கள் பெற்றுள்ள அதீத வரவேற்பின் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மொபைல் சாதன நிறுவனத்தில் உள்ள அதன் பங்குகள் மற்றும் லாபங்களின் வளர்ச்சியை, விரைவான நூதன கண்டுபிடிப்புகள், அதிகரிக்கப்பட்ட ஸினர்ஜிக்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகள் மூலம் முடுக்கி விட உத்தேசித்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் நோக்கம்

நோக்கியா நிறுவனத்தின் நோக்கம்

நோக்கியாவைப் பொறுத்த வரை, இந்த ட்ரான்ஸாக்ஷன் முலம் அதன் வருவாயை குறிப்பிடத்தக்க அளவு பெருக்குவதோடு, அதன் நிதி நிலைமையை வலுவாக்கி, இந்நிறுவனம் நடத்தி வரும் ஏனைய வணிகங்களில் அது செய்யக்கூடிய எதிர்கால முதலீடுகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft to acquire Nokia's devices & services business, license Nokia's patents and mapping services

Microsoft Corporation and Nokia Corporation announced that the Boards of Directors for both companies have decided to enter into a transaction.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X