இந்தியாவின் வளர்ச்சி உறுதியான நிலையை எட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வளர்ச்சி உறுதியான நிலையை எட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை!!
சென்னை: அமெரிக்காவின் குவான்டிடேட்டிவ் ஈஸிங் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு மற்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கரன்ட் அக்கவுண்ட் பற்றாக்குறை (சிஏடி) ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து அவஸ்தைக்குள்ளாகி வருவதாக பாரிஸைச் சேர்ந்த ஆலோசனைக் கிடங்கான ஆர்கனைஸேஷன் ஃபார் எகனாமிக் கோ-ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (OECD) தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு சீனாவின் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியான நிலையை எட்டிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்னும் சிறிது காலம் வரையிலும் கூட வலுவற்றதாகவே இருக்கும் என்று ஓஇசிடி தெரிவித்துள்ளது.

 

சுலபமாக பணம் பண்ணும் திட்டமாக அறியப்படும் சொத்து கொள்வரவு திட்டத்துக்கு மூடுவிழா செய்ய முற்படும் யு.எஸ் ஃபெட் -இன் தீர்மானம் வளரும் நாடுகளின், முக்கியமாக இந்தியாவின், நாணயங்களில் கடும் தடுமாற்றத்தை உருவாக்கியுள்ளது என்றும் இந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

 

"அதீத நடப்பு கணக்கு பற்றாக்குறைகளினால் தவித்துக் கொண்டும், மூலதன வெளிப்பாய்வுகள் போன்ற பெருமளவிலான பொருளாதார அபாயங்களினால் எளிதில் பாதிக்ககூடியதாக இருக்கும் இந்தியா மற்றும் இந்தோனேஷியா போன்ற வளர்ந்து நாடுகள் பொருளாதார குழப்பங்களினால் பெரும் அவதிக்குள்ளாகின்றன. கூடுதலாக, மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் பதற்றத்தினால் உலகளாவிய எண்ணெய் விலைகள் மாறிக் கொண்டேயிருக்கும். இது சமீபிக்கும் எதிர்காலத்தில் நிலவக்கூடிய பணவீக்க வாய்ப்பை மேலும் நிலையற்றதாக ஆக்கும்." என்றும் ஓஇசிடி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No signs of growth stabilizing in India yet: OECD

The Indian economy continues to face the headwinds from possible tapering of quantitative easing policy in the US, leading to sharp depreciation in rupee and ballooning Current Account Deficit (CAD).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X