கறுப்புப் பணத்தை கொண்டு இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய முடியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறுப்புப் பணத்தை கொண்டு இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய முடியுமா?
இந்த ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 20% வரை வீழ்ச்சியுற்று, டாலருக்கு எதிரான செயற்பாட்டில் ஆசிய நாணயங்களிலே மிக மோசமான நிலையில் இருந்தது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.81 வரை வரலாற்று வீழ்ச்சியுற்று, தற்போது 63 என்ற மதிப்பில் வணிகம் செய்யும் அளவுக்கு மீள் மதிப்பேற்றம் பெற்றுள்ளது. ரூபாயின் மதிப்பு குறைவதால், இறக்குமதி பொருட்களின் விலை, குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகமாகிறது, இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதுடன், எரிபொருள் பணவீக்கத்தால் உணவு, காய்கறி மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிவற்றின் விலையும் அதிகமாகிறது.

ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடைந்தது?

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலவணிச் சந்தையில் ரூபாய் வணிகம் செய்யப்படுவதால், டிமாண்ட் மற்றும் சப்ளைக்கு ஏற்றவாறு இதன் மதிப்பு செல்கிறது. இந்நிலையில் இந்தியவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ளது, அதாவது டாலர் வருமானத்தைவிட, டாலரில் செலவு செய்யும் தொகை அதிகமாகும். எண்ணெய் மற்றும் தங்கம் ஆகிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது நாம் அதிகளவு டாலரை செலவு செய்கிறோம்.

மறுபுறம், பொருட்கள், சேவைகளை எற்றுமதி செய்வதன் மூலம் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்புவதன் மூலமும் நாம் டாலரை சம்பாதிக்கிறோம். ஆகவே உதாரணமாக, வர்த்தகத்தில் 10 டாலர் வருமானமும் 20 டாலர் செலவும் ஏற்படும் போது, நமது நடப்புக்கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைய துவங்கும்.

இந்தியா, இந்தோனேசியா, துருக்கி, தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் வணிகம் செய்கின்றன, ஏனென்றால் இவற்றின் நாணயங்கள் மூலதன வெளியீடுகளின் போது பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி, மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் வெளிநாட்டு மூலதன வெளியீடு இருக்கும் பட்சத்தில், இவற்றின் நாணயங்கள் பலமான கசையடிக்கு உள்ளாகின்றன.

இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்துள்ள பெரிய வெளிநாடு நிறுவங்கள், தங்கள் பங்குகளை அல்லது கடன் பத்திரங்களை விற்பனை செய்து டாலர்களை வெளியில் இழுத்துச் செல்லும் போது ரூபாயின் மதிப்பு மேலும் குறையும். இந்த மாத துவக்கத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.81 வரை வரலாற்று வீழ்ச்சியுற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம் ரூபாயின் மதிப்பேற்றத்துக்கு உதவுமா?

நிச்சயமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பேற்றத்துக்கு, இந்த கறுப்பு பணம் உதவும். 2013-2014 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் நடப்புக் கணக்கு சுமார் 70 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தின் அளவு சுமார் 500 பில்லியன் டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகத் தெளிவான மதிப்பிட்டைப் பெறுவது மிகக் கடினம், ஆனால், 500 பில்லியன் டாலர்களாக இருக்க முடியும் என அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

நாம் தற்போது வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை முறையான வங்கி சேனல் வழியாக இந்தியாவுக்குள் திரும்பப் பெற முடிந்தால், நாம் நிச்சயமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறையை முழுமையாக துடைத்துவிட முடியும். 500 பில்லியன் டாலர் கறுப்பு பணம் இவ்வாறு உள்நாட்டுக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டால், வெறும் 70 பில்லியன் டாலர் நடப்புக் கணக்கு பற்றாக்குறை முழுமையாக நீக்கப்பட்டு நடப்பு கணக்கில் உபரித் தொகை இருப்பதற்கு வாய்ப்புண்டு.

உண்மையில், வங்காளதேசம் போன்ற நாட்டில் கூட ஜிடிபி, நடப்புக் கணக்கு நிலுவை பாசிடிவாக உள்ளது.

இந்தியாவிடம் இருக்கும் 275 பில்லியன டாலர் அந்நிய செலாவணி இருப்பு, சுமார் 6-7 மாதங்கள் எண்ணெய் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியும். 500 பில்லியன் டாலர் கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் திரும்பக் கொண்டுவருவதால், கிட்டத்தட்ட இது மூன்று மடங்காகிவிடும்.

1991ல் எண்ணெய் இறக்குமதிக்கு நம்மிடம் போதுமான டாலர்கள் இருக்கவில்லை, இதனால் சர்வதேச நாணய நிதியிடம் இருந்து அந்நிய செலாவணி கடன் பெறுவதற்காக இந்தியா தன்னிடம் இருந்த தங்கத்தை அடகு வைத்தது. 1991இல் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலையில் இருந்தது. அதிஷ்டவசமாக ஐஎம்எஃப் மூலம் கிடைத்த அந்நிய செலாவணி கடன் தொகை எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்த உதவியது. ஆகையால், ஒருவேளை இந்த 500 டாலர் பில்லியன் பணம் கிடைத்தால், நிச்சயமாக அந்நிய செலாவணி இருப்பு ஊக்குவிக்கப்பட்டு, ரூபாயின் மதிப்பு உயர உதவும்.

நாம் இன்று அதுபோன்ற நிலைமையில் இல்லை என்றாலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருப்பது கவலைக்குரியது. இந்த மாதிரியான சூழ்நிலையில், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இலக்கு வைப்பதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. இருப்பினும், உயர்வான மற்றும் பண வலிமை மிக்கவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதால், இதை இலக்கு வைப்பதில் ஒரு வாட்டம் நிலவுகிறது. மேலும் இந்த எண்ணத்துக்கு தளமே அமைக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்துகுரியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எனது பணம் டாலர்களில் பதுக்கி வைக்கப்படிருப்பதால், நான் ஏன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலைப்பட வேண்டும். ஏனைய முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு நிலைகுலையாத வரையில் எனக்கு என்ன கவலை. ரூபாய் மதிப்பை சரி செய்ய அதிகாரிகள் பின்பற்றும் நடவடிக்கைகள் இருக்கும் வரையில் நான் மகிழ்ச்சியாக இருபேன் என்ற நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கும் வரையில் இது சாத்தியமாகாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Could repatriation of black money stashed abroad help the rupee?

Until recently, the Indian rupee was one of the worst performing Asian currencies against the dollar, dropping almost 20% this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X