வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரித்துறை, வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் மற்றும் ரிட்டர்னை தாக்கல் செய்து உரிய வரியை செலுத்துமாறு வலியுறுத்தி மேலும் 35,000 நபர்களுக்கு, கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. இதுவரையில் சுமார் 2,45,000 நபர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாதோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒழுங்காக கட்டி முடிக்க கேட்டுக் கொள்ளும்படியான நடவடிக்கை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது, அதன் ஒரு பகுதியாக ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாத மேலும் சுமார் 35,000 பேருக்கு இந்த வாரம் கடிதங்கள் அனுப்பியுள்ளது. இத்துறை தனது டேட்டாபேஸை குடைந்து, வரி தாக்கல் செய்யாதவர்கள் என்று கண்டுபிடித்த சுமார் 12 லட்சம் நபர்களுள் மேற்கூறிய 35,000 பேரும் அடங்குவர். கடைசியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த நபர்களோடு சேர்த்து, இத்துறை இதுவரை சுமார் 2,45,000 நபர்களுக்கு இது போன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளது." என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

முகவரியை மாற்றிய நபர்கள் அல்லது கடிதத்தை வாங்க மறுத்து விட்ட நபர்களை தொடர்பு கொள்ளும் பொருட்டு, களப்பணி உருவாக்கங்களின் உதவி நாடப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் பணியமர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பு அதிகாரிகளுக்கு ஒரு ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் இத்தகைய நபர்களைப் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். அந்நபர்களுடன் தொடர்பு கொண்டு, அவர் தம் ரிட்டர்னை தாக்கல் செய்யும்படியும், செலுத்த தவறிய வரியை கட்டும்படி நெருக்கடி தருமாறு இவ்வரிவிதிப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை

இந்நடவடிக்கையின் விளைவாக, இதன் இலக்காக குறிவைக்கப்பட்ட பிரிவினரிடம் இருந்து சுமார் 3,44,365 ரிட்டர்ன்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. அத்தகைய நபர்கள் சுமார் 577 கோடி ரூபாய் வரையிலான ஸெல்ஃப்-அசெஸ்மெண்ட் வரியையும், சுமார் 408 கோடி ரூபாய் வரையிலான அட்வான்ஸ் வரியையும் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. வருமான வரித்துறை, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் விதமாக அதன் வரி தொடர்பான சேவைகளை மேம்படுத்த விழையும் அதே வேளையில் ஒழுங்காக வரி கட்டாமல் இருக்கும் நபர்களுக்கு எதிராக செயல்பட தயங்காது என்ற செய்தியை சமுதாயத்தில் பரப்பும் நோக்கில், இது போன்று ரிட்டர்ன்களை ஒழுங்காக தாக்கல் செய்யாத நிகழ்வுகளை கடுமையாக அணுக வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ரிட்டர்ன்களை ஒழுங்காக தாக்கல் செய்யாமல் இருக்கக்கூடிய அனைத்து நபர்களையும் வரி செலுத்த வைக்கும் வரை இந்நடவடிக்கை தொடரும்.

தற்போது வருமான வரித்துறை, 2011-2012 நிதியாண்டின் போது அதிக மதிப்புடைய ட்ரான்ஸாக்ஷன்களில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்நடைமுறையினை செயல்படுத்த ஆலோசித்து வருகிறது. அதன் இ-ஃபைலிங் போர்ட்டலில், தாக்கல் செய்யப்படாத ரிட்டர்ன்கள், சமர்ப்பிக்கப்படாத ஐடிஆர்-வி, செலுத்தப்படாத டிமாண்ட் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வரிவிதிப்புக்குட்பட்ட தனிநபர் எவருக்கும் அளிக்கும் வண்ணம் இதற்கென பிரத்யேக மாட்யூல் ஒன்றை உருவாக்கி வருகிறது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத 2,45,000 நபர்களுக்கு எச்சரிக்கை கடிதம்!!: வருமான வரித்துறை

வரி செலுத்துவோர் அவரது விமர்சனங்களை அதில் போடுவதன் மூலம் இந்த பிரச்சினைகள் எழுந்ததற்கான சூழல் ஏன் உருவானது என்ற காரணத்தை அவர் தெளிவுபடுத்தலாம். இது, வெளிப்படையான செயல்பாடு மற்றும் வரி செலுத்துவோரின் மனக்குறைகளை களைவதற்காக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மற்றொரு மைல் கல் என்று கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income tax department sends letters to 2,45,000 non filers of tax returns

The Income Tax Department has sends letters to another batch of 35,000 non-filers to file returns and pay taxes thereon; Letters have been issued in 2,45,000 cases so far.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X