அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் முடிவுகள், இந்தியாவிற்கு சாதகமே!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: செப்டம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடந்த அமெரிக்க ஃபெடரல் திறந்த சந்தை செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை அறிந்து கொள்ள, உலகம் முழுவதும் உள்ள பங்கு மற்றும் நாணய சந்தைகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு நாள் கூட்டதிற்குப் பின்னர், குவான்டிடேடிவ் ஈசிங் திட்டம் (QE3) பற்றி என்ன செய்யப்போகிறது என்பதை அமெரிக்க ரிசர்வ் தீர்மானிக்கும். இக்கூட்டத்தின் முடிவுகளை அறியும் முன், இந்த QE3 பற்றி முழுமையாக பார்ப்போம்.

QE3 அல்லது சொத்து கொள்முதல் திட்டத்தின் அளவை குறைப்பதற்கான அவசியம் உள்ளதா, இல்லையா என்பது பற்றி ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் பென் பெர்னன்கே அறிவிப்பார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அமெரிக்கா கொள்முதல் செய்து வருகிறது. பொருளாதாரத்தில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டிருப்பதால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், சொத்து கொள்முதல் திட்டத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் முடிவுகள், இந்தியாவிற்கு சாதகமே!!!

சொத்து கொள்முதல் திட்டத்தில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்களை, அமெரிக்க ஃபெடரல் குறைக்கும் என சந்தைகள் எதிர்பார்க்கின்றன. இந்த தொகை இதைவிட அதிகமானால் அது சந்தைகளுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது.

QE3 பற்றிய அமெரிக்க ஃபெடரலின் முடிவு ஏன் இந்திய சந்தைகளுக்கும், ரூபாய்க்கும் முக்கியமானது?

QE3 திட்டத்தின் மூலம் அமெரிக்க ஃபெடரல் பணத்தை பொருளாதாரத்துக்குள் செலுத்துகிறது. இதனால் அமெரிக்க சந்தைகளின் லிக்யூடிட்டி தன்மை அதிகமாகி, இந்த நிலை வளர்ந்துவரும் சந்தைப் பங்கு சந்தைகளுக்கு சாதகமாக அமையும். இது அந்த நாணயங்களின் ஆதரவுக்கும் உதவும்.

ஃபெடரல் ரிசர்வின் QE3 திட்டத்தின் மூலம் பங்குச் சந்தையில் இந்தியாவுக்கு பெருமளவு பணம் கிடைத்துள்ளதால் இது ரூபாயின் மதிப்பின் உயர்விற்கு உதவியது. இந்த லிக்யூடிட்டி வாபஸ் செய்யப்படும் போது, சந்தைகளிலிருந்து பணம் வெளியில் எடுக்கப்படும், குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து ரூபாயும் பாதிக்கப்படும்.

எந்த வகையில் பார்த்தாலும் இந்தியாவுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஃபெடரல் டேப்பரிங் தீர்மானம் என்னவாக இருக்கும்??

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் முடிவுகள், இந்தியாவிற்கு சாதகமே!!!

ஃபெடரல் டேப்பரிங் திட்டத்தின் முடிவுகள்!!

எல்லோரும் எதிர்பார்க்கும் ஃபெடரல் டேப்பரிங் திட்டத்தின் தீர்மானம், வளரும் நாடுகளுக்கு சாதகமாகவே அமைந்தது. அக்கூட்டத்தின் முடிவுகளை ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் பென் பெர்னன்கே இன்று காலை தெரிவித்தார். அவர் டேப்பரிங் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதாக கூறினார்.

மேலும் அவர் இந்தியா போன்று வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். டிசம்பர் மாதம் வரை சொத்து கொள்முதல் திட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது (85 பில்லியன் டாலர் சொத்து கொள்முதல் தொடரும்) என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets, rupee await crucial Fed decision

The meeting of the US Federal Reserve Open Market Committee meet on Sept 17 and Sept 18, is perhaps the most eagerly awaited event for stock and currency markets around the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X