வீடு மற்றும் மோட்டர் வாகன கடன் வாங்க வேண்டுமா, வெயிட் பண்ணுங்க பாஸ்!! சூப்பர் திட்டம் வருகிறது

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடு அல்லது கார் வாங்குவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ‘ஃபண்டிங் ஃபார் லென்டிங்'(கடன் வழங்குவதற்காக நிதி வழங்குதல்) முறையை கொண்டுவருவதற்கு ஆர்பிஐ திட்டமிடுகிறது. இதன் கீழ் 1 - 2% என்ற மிக குறைவான விகிதத்தில் மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு கடன் வழங்கும். இதனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விகிதத்தில் கடன் வழங்கவாய்ப்பு உண்டு.

"இந்த சிறப்பான திட்டம், ஆர்பிஐயிடமிருந்து மிகக் குறைவான விகிதத்தில் பணம் பெறுவதற்கு வங்கிகளை அனுமதிக்கிறது. இந்த மலிவான மறு நிதி திட்டம், சந்தை விகிதங்களை விட 1% முதல் 2% வரை குறைவான விகிதத்தில் எல்லா வங்கி கிளைகளிளும் கிடைக்கும்."

 

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் வை.வி. ரெட்டி பதவி வகித்த காலத்தில், நுகர்வை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. கொள்கை விகிதங்களை குறைப்பதற்கு ஆர்பிஐயிடம் வாய்ப்பு குறைவாக இருப்பதால், அரசாங்கத்தின் இந்த முயற்சி, வீட்டுகடன் மற்றும் மோட்டர் வாகன கடன் விகிதங்களைக் குறைக்க ஒரு சிறந்த திட்டமாகும்.

உயர் வட்டி விகிதங்கள்

உயர் வட்டி விகிதங்கள்

"உயர் வட்டி விகிதங்களால் நுகர்வு குறைகிறது, ஆகவே நுகர்வை ஊக்குவிக்க இந்த திட்டம் பயன்படுத்தப்பட முடியும். ஆர்பிஐ, வங்கிகளுக்கு குறைவான விகிதத்தில் நிதி வழங்கும் போது, வீட்டுகடன் மற்றும் மோட்டர் வாகன கடன்களை மிக குறைவான விகிதங்களில் பெறுவதற்கு வழிவகுக்கும்"

ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை

ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை

ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை ஆகிய இரண்டும் வர்த்தக மந்தநிலை பாதிப்புகளால் தள்ளாடுகிறது. வீட்டுவசதி துறையில் இருப்புகள் குவிக்கப்படும் அதேவேளை, மோட்டார் வாகனத்துறையும் சில வருடங்களாக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலை நிதி அமைச்சகம் மற்றும் ஆர்பிஐ இரண்டிலும் விவாதிக்க பட்டது.

பணவீக்கம்
 

பணவீக்கம்

ஏற்கனவே பணவீக்கம் உயர்வாக இருக்கிறது, இந்த நடவடிக்கையால் இது மேலும் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தொழில்துறை பணவீக்கம் 4% ஆக இருப்பதால், நுகர்வு தூண்டுதலை சமாளிக்க முடியும் என முடிவெடுக்கும் செயல்முறையின் நெருக்கமான ஆதாரங்கள் கூறுகிறது.

விரைவில் அறிவிக்கப்படும்

விரைவில் அறிவிக்கப்படும்

இந்த மறு நிதி திட்ட நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இன்று முதல் வெளியிட்ட புதிய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் பணவியல் கொள்கை மறு ஆய்வின் ஒரு பகுதியாக இது இருக்க சாத்தியமில்லை. " ஆலோசனை செய்யப்படுவதற்கு வேறு பல நடவடிகைகள் உள்ளன. இந்த திட்டம் இன்னும் விவாத நிலையில் இருக்கிறது, ஆனால் இது தீவிர படுத்தப்பட்டு வருகிறது" என சேனல் தெரிவிக்கிறது.

ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறையில் வளர்ச்சி

ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறையில் வளர்ச்சி

இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டால், குறைந்து வரும் நுகர்வுக்கு உத்வேகம் அளிக்க அரசு தலையிட முனைவதால், ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Funding for lending' scheme in works to make home & auto loans cheaper

Waiting for the Reserve Bank of India (RBI) to cut interest rates before deciding on buying that home or a car? You may not need to!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X