English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

ரிசர்வ் வங்கியின் புதிய நிதியியல் கொள்கை!! ராகுராம் ராஜன் அதிரடி..

Posted By: Staff
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: புதிய ஆர்பிஐ கவர்னரின் முதல் நிதியியல் கொள்கை ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பணவீக்கம் பற்றிய ஆர்பிஐ தகவல் மற்றும் இதைப்பற்றிய பலத்த குரல் சந்தைகளை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இந்த கொள்கையிலிருந்து எடுக்கப்பட்ட 6 அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெப்போ ரேட் விகிதத்தில் உயர்வு

பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ரெப்போ ரேட் உயரும் என எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆர்பிஐ, ஏனைய வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் விகிதத்தையே ரெப்போ ரேட் என கூறப்படும், இந்த விகிதங்களில் ஏதாவது ஏற்றம் ஏற்பட்டால், கடன் வழங்கும் விகிதம் உயரும், இது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல. இருப்பினும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த விகித உயர்வு அவசியம். இதுவே ஆர்பிஐ விகிதங்களை உயர்த்தியதற்கான காரணம்.

பணவீக்கம் பற்றிய பலத்த குரல்

பொருளாதார வளர்ச்சி குறைவது பற்றி கவலைப்படாமல், ஆர்பிஐ பணவீக்கதுக்கு எதிராக தொடர்ந்து போராடும் என இந்த நிதியியல் கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் 2013-2014 Q1 இல் தளர்ந்தது, ரூபாயின் மதிப்பு தேய்வு மற்றும் சர்வதேச பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றால் எரிபொருள் விலையும் உயர்ந்தது, இதனால் மீண்டும் பணவீக்கம் உயர துவங்கியது

 

நெகடிவ் அவுட்புட் இடைவெளி

நெகடிவ் அவுட்புட் இடைவெளி, பணவீக்க அழுத்தத்தை குறைக்கும், விநியோக கட்டுபாடுகள், குறிப்பாக உணவு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான தளர்வுகள் இந்த செயல்முறைக்கு உதவும். இருப்பினும், ஒரு பொருத்தமான கொள்கை பிரதிபலிப்பு இல்லாததால், WPI பணவீக்கம் துவக்கத்தில் கணிப்பிடப்பட்டதை விட, எஞ்சிய வருட காலத்தில் உயர்வாக இருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் விலை குறியீடு (CPI)

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நுகர்வோர் விலை குறியீடு (CPI) மூலம் கணிக்கப்பட்ட சில்லறை மட்ட பணவீக்கம் பல ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது, உயர்மட்டத்தில் வலிமையாகி வரும் பணவீக்கம், நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை சிதைத்துவிடும். ஆயினும் வலுவான கைரிஃப் (kharif ) சாகுபடிகள் CPI பணவீக்கத்தை தணிக்க வழிவகுக்கும், என்றாலும் போதுமானதாக இருக்காது" என ஆர்பிஐயின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டது.

எம்எஸ்எஃப் விகிதங்கள் குறைப்பு

ஆர்பிஐ மார்ஜினல் ஸ்டான்டிங் பெசிலிட்டி (எம்எஸ்எஃப்) விகிதத்தை 10.25 சதவிகிததில் இருந்து 9.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது உடனடியாக செயல்படுத்தபட்டுள்ளது. எம்எஸ்எஃப் இன் கீழ் வங்கிகள், ஆர்பிஐயிடமிருந்து ரெப்போ ரேட் பிளஸ் 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் கடன் வாங்கி வந்தன, அதாவது 8.25 சதவிகிதம். ஆனால், கடந்த ஜூலை 17இல் இருந்து, வங்கிகள் 10.25 சதவிகிதத்தில் கடன் பெற்று வந்தது. 0.25% சந்தை எதிர்பார்புகளுக்கு எதிராக, இந்த விகிதம் தற்போது 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தினசரி சிஆர்ஆர் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது

பண இருப்பு விகித (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) குறைந்தபட்ச தினசரி கையிருப்பு 99 சதவிகிததிலிருந்து 95 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2013 செப்டம்பர் 21இல் இருந்து 2 வாரங்களில் அமுலுக்கு வரும். அதுவரை சிஆர்ஆர் விகிதம் 4.0 சதவிகிதமாக இருக்கும்.

பங்குச் சந்தை

ஆர்பிஐயின் விகித உயர்வு முடிவைத் தொடர்ந்து சென்செக்ஸ் 515 சரிந்து, வியாழனன்று 615 புள்ளிகள் வரை உயர்ந்து அதிக இலாபத்தைக் கொடுத்துள்ளது.

வங்கி இருப்பு விகிதம்

ஆர்பிஐயின் விகித உயர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கி இருப்பு விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. யெஸ் பாங்க் -11%, பஞ்சாப் நெஷனல் பாங்க்-9%, பாங்க் ஆஃப் இந்தியா 8%, ஆக்ஸிஸ் பாங்க் - 7% மற்றும் பாரத ஸ்டேட் வங்கி - 5.25%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

6 key takeaways from the RBI Monetary Policy

The first monetary policy from new RBI Governor was a pleasant surprise.
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC