ஏம்ப்பா கார் லோன் வாங்க எந்த பேங்கு போகலாம்???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ விகித்தை உயர்த்தியுள்ளதால், அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டி விகிதம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெப்போ விகிதத்தை பொருத்து தான் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன்களை அளிக்கிறது. சரி கார் கடனுக்கு வங்கிகள் பலவும் என்ன வட்டி விகிதங்கள் வசூல் செய்கின்றன என்பதை பற்றி பார்க்கலாமா?

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

நான்கு சக்கர வாகன பிரிவின் மிகப்பெரிய நிதியாளராக விளங்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கார்களுக்கு அதிகபட்சமாக எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து 90% சதவீதம் கடன் அளிக்கிறது. ஐந்து வருடங்கள் வரை கடன் காலம் நிர்ணயித்துக் கொள்ளலாம். புது கார்களுக்கு மாறா வட்டி (பிக்சட்) முறையிலேயே கடன்கள் வழங்கப்படுகிறது. ஐந்து வருட கால கடனுக்கு 10.75% வட்டி வசூலிக்கப்படுகிறது. இது போக நிர்வாக செய்முறை கட்டணம், ஆவண கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை கூடுதலாக கையில் இருந்து கட்ட வேண்டியிருக்கும்.

ஓரியண்டல் பேங் ஆப் காமர்ஸ்

ஓரியண்டல் பேங் ஆப் காமர்ஸ்

பொது துறை வங்கியான ஓரியண்டல் பேங் ஆப் காமர்ஸ் புது கார்களுக்கு அடிநிலை வீதத்தில் கடன் அளிக்கிறது. அடிநிலை வீதம் என்றால் வங்கி கடன் அளிக்க முடிவு செய்த வீதம் மற்றும் கடனின் காலத்தை பொறுத்து கூடுதலான வீதம். 3 வருட கால கட்டத்திற்கு கடன் பெற்றால் தற்போதைய அடிநிலை வீதமான 10.25% + 0.50% என 10.75% வட்டியாக வசூல் செய்கிறது. இதுவே கடன் காலம் 7 வருடங்களுக்குள் இருந்தால் 11% வட்டி வசூல் செய்கிறது. இது அடிநிலை வீதத்தை விட 0.75% அதிகமாகும்.

ஐ.டி.பி.ஐ வங்கி

ஐ.டி.பி.ஐ வங்கி

இந்த வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே வீதமாக 10.50% வட்டி வசூல் செய்கிறது. இது அடிநிலை வீதத்தை விட 0.25% அதிகமாகும். இங்கு அதிகபட்சமாக 5 வருட காலம் வரை கடன் காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

பாரத ஸ்டேட் வங்கி
 

பாரத ஸ்டேட் வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ 10.75% வட்டித் விகிதத்தில் கார் கடன்களை வழங்குகிறது. இது 9.80 சதவீதமாக இருக்கும் இந்த வங்கியின் அடிநிலை வீதத்தை விட 0.95% அதிகமாகும். அனைத்து கடன் காலங்களுக்கும் இந்த வட்டி வீதமே வசூல் செய்யப்படுகிறது. நீங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் கார் கடன்கள் பெறுவதற்கு உங்களின் வருட நிகர சம்பளம் 6 லட்சமாக இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை சமீபத்தில் தான் சேர்த்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி, 3 வருட காலத்திற்கு குறைவான கார் கடன்களுக்கு அதன் அடிநிலை வீதத்துடன் 1% அதிக வட்டி வசூல் செய்கிறது. 3 வருடத்திற்கு மேலான கடன்களுக்கு அதன் அடிநிலை வீதத்துடன் 1.5% அதிகமாக வசூல் செய்கிறது. பிப்ரவரி 9, 2013 முதல் அடிநிலை வீதம் 10.25 சதவீதமாக உள்ளது.

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடா

கடன் காலம் எவ்வளவு இருந்தாலும் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பேங்க் ஆப் பரோடா 10.50% வட்டி வசூல் செய்கிறது. அதன் அடிநிலை வீதமான 10.25 சதவீதத்திலிருந்து 0.25% கூடுதலாக வசூல் செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Quick look at interest rates on Car Loans

Interest rates are set to rise as the Reserve Bank of India (RBI) last week hiked repo rates. These are rates at which RBI lends money to banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X