அமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்?? எதற்காக???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அரசின் தற்போதைய பணிநிறுத்தம், அத்தியாவசிய சேவைகளான தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்ட சில சேவைகளைத் தவிர்த்து பிறவற்றுக்குத் தேவையான நிதி சட்ட ஒப்புதல் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஃபெடரல் அரசிடம் போதிய அளவிலான பணம் இல்லாத காரணத்தினால், ஊதியங்கள் மற்றும் இதர செலவுகளுக்கான பணத்தை செலுத்த வழிவகை செய்யக்கூடியதான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் அமெரிக்க காங்கிரஸ் முடங்கச் செய்துள்ளது. இதனால் பகுதியளவிலான இப்பணிநிறுத்தம் உருவாகியுள்ளது.

காரணம்...

காரணம்...

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று, முன்னதாகவே அரசாங்க இயந்திரங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கான பட்ஜெட்டை வெவ்வேறு செலவீட்டு பில்களின் மூலம் நிதியாண்டு காலம் முடியும் முன் நிறைவேற்றுவது அமெரிக்க காங்கிரஸின் கடமையாகும். ஆனால், குடியரசு கட்சியினால் வழிநடத்தப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேட்டிவ் மற்றும் டெமாக்ரட்டிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனேட் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள பட்ஜெட் மற்றும் நிதி சார்ந்த பாலிஸியின் மீதான கருத்து வேற்றுமை காரணமாக, 1996 ஆம் வருடத்திற்குப் பின் முதன்முறையாக அமெரிக்க அரசாங்கம் இத்தகைய பணிநிறுத்தத்தை சந்தித்துள்ளது.

பணி நிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

பணி நிறுத்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

இந்த பணி நிறுத்தத்தின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், குறிப்பிட்ட சில அரசாங்க ஏஜென்சிகள் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் மிக மோசமாக பாதிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 0.8 மில்லியனுக்கும் அதிகமான நான்-எஸென்ஷியல் அரசுப் பணியாளர்கள், சில காலம் வரையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தொழில்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இன்றியமையாத சேவைகள் பலவும் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான சில சேவைகள் மட்டும் வழக்கமான முறையில் இயங்கும்.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி!!

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி!!

ஒபாமாவினால் பரிந்டுரைக்கப்பட்ட உடல்நலச் சட்டத்தினை அமல்படுத்துவதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளோரும் எத்தகைய பாதிப்புமின்றி தம் பணியை தொடருவர்; ஏனெனில், இவர்களுக்கான நிதிக்கும் வருடாந்தர செலவீட்டு பில்லுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லாததே காரணம் ஆகும். எனவே இப்பணிநிறுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்தக்கூடும்.

இன்னும் எவ்வளவு நாட்கள்??

இன்னும் எவ்வளவு நாட்கள்??

இந்த பணிநிறுத்தத்தின் காலவரையறையை தீர்மானிப்பதென்பது மிகவும் கடினம்; ஏனெனில், இது கொள்கைரீதியில் ஏற்பட்ட வேற்றுமைகளினால் விளைந்த பணிநிறுத்தமே தவிர தொழில்நுட்ப தடுமாற்றங்களினால் விளைந்ததன்று. 1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேட்டிவ் மற்றும் டெமாக்ரெட்டிக் கட்சியைச் சேர்ந்த பிரசிடென்ட்டுக்கும் இடையே நிலவிய கருத்து வேற்றுமையினால் விளைந்த பணிநிறுத்தம் சுமார் 21 நாட்கள் வரை நீடித்தது.

அமெரிக்க பொருளாதார நிலை!!

அமெரிக்க பொருளாதார நிலை!!

அமெரிக்க அரசின் பணிநிறுத்தம் உலகளாவிய சந்தைகளின் முதலீட்டாளர்களை பயம் கொள்ளச் செய்து, பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்றே நிபுணர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்காவின் கரன்ஸி சந்தை, யு.எஸ் டாலரின் மதிப்பில் தற்காலிகமான வீழ்ச்சியைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the US government shutdown all about?

The US government shutdown is a political condition wherein the government ceases to grant all but essential services including fire-fighting, police services etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X