இருசக்கர வாகனங்கள், ப்ரிஜ், டிவி வாங்க குறைந்த வட்டியில் வங்கி கடன் திட்டம்!!: ப.சிதம்பரம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடாளுமன்ற தேர்தல்களையொட்டி, கடந்த பத்தாண்டுகளிலேயே மிகவும் மோசமான மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக நிதியமைச்சர் ப.சிதம்பரம் முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களுக்கான தேவையை ஊக்குவிப்பதற்காக வங்கிகள் குறைந்த அளவிலான கடன்களை அளிக்கின்றன.

சிதம்பரம் மற்றும் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக இருக்கும் திரு.ரகுராம் ராஜன் ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த வங்கிகளுக்கு தனிப்பட்ட மூலதனங்கள் தரப்படும் என்று நிதியமைச்சகம் கூறியுள்ளது.

மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக நுகர்வோர்களின் தேவைகள் பெருகியும், குறைந்து வரும் வேலைவாய்ப்புகளும், பணவீக்கம் வேகமாக உயர்ந்து வரும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி 4.4% சரிவு!!

பொருளாதார வளர்ச்சி 4.4% சரிவு!!

நுகர்வோர்களின் செலவினங்கள் வருடத்திற்கு 1.6 சதவீதம் குறைந்து வருகிறது, ஜுன் வரையிலான காலாண்டிற்கு முன்பு இதன் வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்து குறிப்பிடத்தக்கது. மேலும் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது, அது கடந்த நான்கு ஆண்டுகளிலேயே குறைந்த அளவு என்பது மிகவும் வருந்ததக்கது.

மக்களுக்கு பயனுள்ள திட்டம்!!.

மக்களுக்கு பயனுள்ள திட்டம்!!.

"நுகர்வோர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இத்திட்டம் சற்று சாதகமாக இருக்கும், மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்திக்கும் உந்துதலாக இருக்கும்." என்று அமைச்சகத்தின் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும்..

நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும்..

இத்திட்டம் அதிகமான வட்டி விகிதம் மற்றும் பணவீக்கத்தால் தாக்கப்பட்டிருக்கும் நுகர்வோர் பொருட்களான இருசக்கர வாகனங்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த துறை வளர்ச்சியில் பின்னடைவு எற்பட்டுள்ளது.

குறுகிய கால நடவடிக்கை

குறுகிய கால நடவடிக்கை

'இது ஒரு குறுகிய கால நடவடிக்கை, நுகர்வேர் மற்றும் வாகன துறையின் தேவையை உந்துவதற்கு உதவியாக இருக்கும்' என்று டெல்லியைச் சேர்ந்த சிந்தனை மையமான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பொருளியல் வல்லுநர் என்.ஆர்.பானுமூர்த்தி தெரிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி!!

2008-ம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி!!

சீனாவைப் போலில்லாமல், இந்தியா பெருமளவில் உள்நாட்டு தேவை நம்பியுள்ள பொருளாதார நாடு. இந்தியாவில் நுகர்வோர்களின் தேவைகள் வலுவாக இருந்ததால் தான் 2008-ம் ஆண்டின் மிகவும் மோசமான உலகளாவிய நிதி பிரச்னைகளிலிருந்து நாம் காத்துக் கொள்ள முடிந்தது.

மூன்றாம் முறையாக ஆட்சி!!

மூன்றாம் முறையாக ஆட்சி!!

வரக்கூடிய தேசிய தேர்தல்களில் நேரடியாக மூன்றாம் முறை ஆட்சியைப் பிடிக்க எண்ணிக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்திற்கு இந்தியாவின் சீரழிந்து வரும் பொருளாதார மந்தநிலை மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி!!

10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி!!

கடந்த 2 வருடங்களில் பத்தாண்டின் பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்தது 5% சரிந்தது, கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைந்து. மேலும் 1991-92ஆம் ஆண்டின் பொருளாதார விழ்ச்சியை தொடர்ந்து, 2013-14ஆம் ஆண்டு தான் குறைவான வளர்ச்சி அடைந்ததுள்ளது. வாழ்த்துக்கள் மன்மோகன் ஜி!!..

ஒருவரின் சராசரி வருமானம் 1000 டாலர் மட்டுமே!!

ஒருவரின் சராசரி வருமானம் 1000 டாலர் மட்டுமே!!

1.2 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா நாட்டில், ஒரு மனிதனின் சாரசரி வருமானம் வெறும் 1000 (62000 ரூபாய்) டாலர் மட்டுமே.

இப்படி இருந்த நாடு எப்ப முன்னேறும்... (சங்கர் படம் டயலாக்)

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks to offer cheap loans for bikes, fridges to stimulate growth

Banks will offer cheaper loans to stimulate demand for two-wheelers and other consumer durables as finance minister P Chidambaram tries to pull the economy out of the worst slowdown in a decade ahead of national elections due by next May.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X